herzindagi
image

Diwali 2024: களைகட்ட துவங்கிய தீபாவளி பண்டிகை, நாடு முழுக்க கோலாகலம்!

2024 அக்டோபர் 31 ஆம் தேதி நாடெங்கிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தீபாவளி பண்டிகை உருவான வரலாறு, அதன் புராண கதைகள் எல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-10-28, 20:36 IST

தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாளே, தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. இந்த தீப ஒளி திருநாள் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி, ஆனால் வடமாநிலங்களில் ராவணனை வதம் செய்துவிட்டு ராமரின் வெற்றியை நினைவுபடுத்தும் விதமாகக் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2024 அக்டோபர் 31 ஆம் தேதி நாடெங்கிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தீபாவளி பண்டிகை உருவான வரலாறு, அதன் புராண கதைகள் எல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கிருஷ்ணர் நரகாசூரனை அழித்தத்தால் உருவான பண்டிகை தான் தீபாவளி, வனவாசம் முடிந்து ராமர் சீதையுடன் நாடு திரும்பிய நாள் தீபாவளி என்றும், சமுத்திர புத்திரன் புதல்வி லட்சுமி தேவி தோன்றிய நாள் இது என்றும் பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. இந்த கதைகள் அனைத்தும் ஒரே நாளில் அடங்கி விடுவது தான் தீபாவளியின் சிறப்பு. மேலும் அதே நேரத்தில் தீபாவளிக்கு ஒவ்வொரு புராண கதைகள் இருப்பது போல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி கொண்டாட்டஙகள் மாறுபடுகிறது.

தமிழ்நாடு :

gettyimages-1780578446_1_0
தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் அழித்த தினம் தான் தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் உடுத்தி இறைவனை வழிபடுவார்கள். இதற்கு பிறகு பெரும்பாலான வீடுகளில் கறி உணவு படையல் வைக்கப்படும். அதே போல நாள் முழுக்க பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவர்.

குஜராத் :


குஜராத் மாநிலத்தில் தீபாவளி பண்டிகை தினத்தில் பாரம்பரிய தாண்டியா நடனம் ஆடி தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வீடுகளில் வண்ணமயமான விளக்குகள், வாசலில் ரங்கோலி கோலங்கள், இரவு நேர தீபங்கள், கலர் கலர் வாணவேடிக்கைகள் என குஜராத் மாநிலம் முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு வீட்டில் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? ஜோதிடம் கூறுவது என்ன?

மகாராஷ்டிரா:

Diwali_2024_1730080045397_1730080045645
மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை பசுவை வணங்கும் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசுபராஸ் எனும் பசுக்களுக்கான பூஜை ஒன்று இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தீபாவளி தினத்தில் கன்றுடன் பசுவை வீட்டிற்கு வாங்குவது மற்றும் தினந்தோறும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றும் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கம் :


மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை தினத்தன்று, காளி பூஜை நடைபெறும். இங்கு அவர்களின் பழங்கால மரபுகள் படி சில பூஜைகள் நடைபெறும். பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவர்.

ஒடிசா:


ஒடிசா மாநிலத்தில் தீபாவளி பண்டிகையானது அவர்கள் முன்னோர்களை வழிபாடும் ஒரு நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு வழக்கமான பூஜை தான். அந்த பூஜை முன்னோர்கள் நினைவாக இந்த தீபாவளி தினத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com