கோடை விடுமுறை வந்தாலே வெளியூர் பயணம் செய்வதற்கான உங்களுக்குத் தேவையான பொருள்களையெல்லாம் தேடி தேடி எடுத்து வைக்க ஆரம்பிப்பீர்கள்.உறவினர்களின் வீடு அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக கோடை விடுமுறைக்காக காத்திருப்போம். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த விடுமுறையை வட இந்தியா பக்கம் செல்ல ப்ளாண் போடுங்கள். இதோ உங்களுக்கான சில ஐடியாக்கள் உங்களுக்காக
வட இந்திய சுற்றுலா தலங்கள்
ஸ்ரீநகர், காஷ்மீர்:
இந்தியாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது ஸ்ரீநகர். இந்தியாவின் வட கோடியில் அமைந்துள்ள இந்த பகுதி சுற்றுலா பயணிக்கு எப்போதுமே மிகவும் விருப்பமான ஒன்றாகும். மலையில் உள்ள வானுயர்ந்த மரங்கள், கோடை மாதங்களில் பூத்துக்குலுங்கும் ஆப்பிள் பழத்தோட்டங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிக்கு விருந்தாக அமையும். குளிர்காலங்களைப் போன்று குளிர் இல்லையென்றாலும் கோடை வெயிலை சமாளிப்பதற்கான இயற்கை சூழல் கட்டாயம் இருக்கும். மலையேற்றம், ஏரிகள், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை அனைத்தும் புதுமையான அனுபவமாக நிச்சயம் உங்களுக்கு அமையக்கூடும்.
நைனிடால், உத்தரகாண்ட்
குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களில் ஒன்றாக உள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் சிறந்த தேர்வாக அமையும். கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைவாசஸ்தலத்தைச் சுற்றிலும் பெரிய பனி மூடிய சிகரங்கள் உள்ளன. இமயமலை தொடரில் அமைந்துள்ள முக்கியமான மலைவாசஸ்தலில் ஒன்றாக உள்ளது. பழமையான தேசிய பூங்காவும் இங்கு உள்ளது. மேலும் ரிஷிகேஷ், டேராடூன், ஜிம் கார்பெட் போன்ற பகுதிகளில் உள்ளன.
சிம்லா, இமாச்சல பிரதேசம்
கோடை வெயிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சிம்லா உங்களுக்கு முக்கிய தேர்வாக அமையும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூட இனிமையான மற்றும் சீரான வானிலை உங்களது மனதை இதமாக்கும். மேற்கு இமயமலையில், அழகிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது கூட்டாளருடன் அழகான இடத்தைப் பார்வையிடலாம்.
கசௌலி, இமாச்சல பிரதேசம்:
இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது, கண்கொள்ளாக் காட்சிகளால் நிரம்பிய அழகிய மற்றும் அழகிய நகரமாகும். கில்பர்ட் பாதை, சன்செட் பாயிண்ட், கூர்க்கா கோட்டை போன்ற பல்வேறு இடங்கள் கேடை காலங்களில் நல்ல தட்ப வெப்பத்தோடு சுற்றுலா பயணிகளுக்கு இதமான குளிர்ச்சியையும் தருகிறது.
முசோரி:
கோடைக்காலத்தில் தென்றல் காற்றுடன் இதமான பருவ காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் முசோரிக்கு ஒரு ட்ரிப் போகலாம். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் இந்த இடம் ஆண்டு முழுவதுமே அமைதியான மற்றும் அழகிய சூழலையும் வழங்குகிறது. கோடைக்காலத்தில் வெயிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இந்த இடத்திற்கு கட்டாயம் ஒரு விசிட் போகலாம்.
Image source- Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation