கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாடுவது ஏன்? நள்ளிரவு கொண்டாட்டங்களின் சிறப்பம்சம் இதோ

அட்வென்ட் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் வருகை என்று அர்த்தம். இயேசுவின் வருகையை குறிப்பதால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் கிறிஸ்துமஸ் ஈவ் என்று கூறப்படுகிறது. 
image

இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் கிறிஸ்துமஸ் ஈவ் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை பரிமாறி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்வார்கள். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அனைவரின் வீடுகளிலும் கலர் கலர் லைட்ஸ், ஸ்டார்ஸ், குடில், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ட்ரீ ஆகியவை இருக்கும். கிறிஸ்துமஸ் தினத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளில் ப்ளம் கேக் வெட்டி கொண்டாடுவது உண்டு. அந்த வரிசையில் கிறிஸ்துமஸ் ஈவ் என்றால் என்ன என்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் ஈவ்:


கிரிகோரியன் கேலண்டர் படி டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாடப்படுகிறது. இது அட்வென்ட் பருவத்தின் உச்ச நிலையை குறிக்கும். அட்வென்ட் என்பது கிறிஸ்துமஸ்க்கு முன் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தொகுப்பு என்று கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது. அதேபோல அட்வென்ட் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் வருகை என்று அர்த்தம். இயேசுவின் வருகையை குறிப்பதால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் அட்வென்ட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் நாளடைவில் கிறிஸ்துமஸ் ஈவ் என்று தேவாலயங்களில் கொண்டாட துவங்கியது.

2b23283147584a6e7c4a890e2f87682a_1671862274495_1671862353466_1671862353466

கிறிஸ்துமஸ் ஈவ் சிறப்பம்சம்:


உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்கள் பரிசுகளை வாங்குவதற்காக சாண்டா கிளாஸை எதிர்பார்த்து இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் காத்திருப்பார்கள். அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தாவும் குழந்தைகளுக்கான பரிசுகளை எடுத்துக்கொண்டு தனது பயணத்தை தொடங்கும் நாள் கிறிஸ்துமஸ் ஈவ் என்று கூறப்படுகிறது. மேலும் குழந்தைகள் சாண்டா தாத்தாவிற்காக பால் மற்றும் குக்கீஸ் வைப்பார்கள் என்றும் அவர்கள் தங்கள் வீடுகளில் தொங்க விட்டிருக்கும் சாக்ஸ்களில் தான் சாண்டா பரிசுகளை விட்டு செல்வார் என்றும் கூறப்படுகிறது.

IMG_9735A

இதுவே பைபிள் கூறுவதை பார்க்கும் போது, கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது வெவ்வேறு வழிபாடுகளை கொண்ட ஒரு பண்டிகை ஆகும். குறிப்பாக விஜில் ஆஃப் தி நேட்டிவிட்டி ஆஃப் த லார்ட், மாஸ் அட் மிட் நைட், மாஸ் அட் டான், மாஸ் டியூரிங் த டே என்று நான்கு வகைகளாக இந்த வழிபாடுகள் பிரிக்கப்படுகிறது. எனவே கிறிஸ்துமஸ் ஒரு நாளுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. ஒரு சில தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் வழிபாடு நள்ளிரவில் மிட்நைட் மாஸ் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும் படிக்க: யார் இந்த சாண்டா தாத்தா? கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய வரலாறு தெரியுமா?

மிட்நைட் கொண்டாட்டங்கள்:


பெரும்பாலான கிறித்துவ மக்கள் கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தன்று மாலைகளில் அல்லது நள்ளிரவில் தேவாலயங்களுக்கு செல்வார்கள். அங்கு இயேசுவின் பிறப்பை குறித்து கேரோல்ஸ் பாடல்கள் இசைக்கப்படும். இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸை 24 ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரியா, போலாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்மதுஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

IMG_9735A

அந்த வரிசையில் இந்த கிறிஸ்துமஸ் ஈவ் தினத்தில் மக்கள் தேவாலயங்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது உண்டு. இதற்கு பிறகு தேவாலயங்களில் கேக் வெட்டி கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவார்கள். மறுநாள் அதாவது 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் வீடுகளில் சுவையான அசைவ உணவுகளை சமைத்து, பலகாரங்கள் செய்து பிறருக்கு பகிர்ந்து சாப்பிடுவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையின் மற்றொரு சிறப்பம்சம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது. பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தவறாமல் வீட்டுக்கு சென்று விடுவார்கள். அப்பா அம்மா பாட்டி தாத்தா அண்ணன் அக்கா என்று எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக அமர்ந்து ஒரு கிளாஸ் வயின் மற்றும் கேக் உடன் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP