ஆடி முதல் வெள்ளியில் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை! வீட்டில் அதிகரிக்கும் இறை சக்தி

ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான ஜூலை 19ஆம் தேதி அன்று மேற்கொள்ள வேண்டிய ஆடி வெள்ளி வழிபாடு பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Aadi velli

ஆடி மாதம் பிறந்தாலே ஒவ்வொரு நாளும் விசேஷமானதாக இருக்கும். அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு கூழ் ஊற்றுவார்கள். ஆடி மாதத்தின் சிறப்பான நாட்களாக ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு உள்ளன. இதில் இந்த ஆண்டு முதலாவதாக ஆடி வெள்ளி வருகிறது. இந்த ஆடி மாதத்தில் மொத்தம் ஐந்து வெள்ளிக்கிழமைகள் அமைந்திருக்கின்றன. எனவே ஒவ்வொரு ஆடி வெள்ளியும் அம்மனை விதவிதமாக வழிபாடு செய்யலாம்.

ஆடி வெள்ளி நாட்கள்

19-07-2024

26-07-2024

02-08-2024

09-08-2024

16-08-2024

  • ஆடி வெள்ளி வழிபாட்டை இரண்டு வகையாக பிரிக்கலாம். கடன், சொத்து, உறவுகளில் பிரச்னை தீர்ந்திட ராகு காலத்தில் ஆடி வெள்ளி வழிபாடு மேற்கொள்ளலாம்.
  • மற்றொன்று செல்வ செழிப்புடன் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்திட சுக்கிர ஓரையில் வழிபாடு செய்யலாம்.
  • ஆடி வெள்ளியில் காலை 10.30 முதல் மதியம் 12 வரை ராகு காலம் ஆகும்

சுக்கிர ஓரை

காலை - 6 மணி முதல் 7 மணி வரை

மதியம் - 1 மணி முதல் 2 மணி வரை

இரவு - 8 மணி 9 மணி வரை

  • ராகு காலத்தில் வழிபாடு செய்ய நினைக்கும் நபர்கள் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி ஆரவல்லி பூ கொண்டு அர்ச்சனை செய்யவும்.
  • சுக்கிர ஓரை நேரத்தில் வழிபாடு நடத்த நினைப்பவர்கள் மகாலட்சுமிக்கு பால் மற்று கற்கண்டு கொண்டு நெய் நெய்வேத்தியம் செய்து தாமரை மலரினால் அர்ச்சிக்கவும்.
  • ஜூலை 19 ஆடி வெள்ளியில் பிரதோஷமும் சேர்ந்தே வருகிறது. எனவே தோஷங்கள் நீங்க சிவபெருமானின் திருஉருவ படத்திற்கு வில்வ மரத்தின் பூ மாலை சாற்றவும்
  • மேலும் கூடுதலாக பிரதோஷ விரதம் கடைபிடித்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
  • ஆடி வெள்ளியில் அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்வது நல்லது. எனவே மாலை 6 மணிக்கு வீட்டில் திருவிளக்கு ஏற்றவும்.
  • திருவிளக்கு பூஜை சகல விதமான தெய்வங்களுக்கும் பொருந்தும். ஆடி வெள்ளியில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.
  • தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு மற்றும் ரூபாய் நோட்டு வைத்து கொடுக்கவும்.
  • இப்படி செய்வதால் வீட்டில் இறை சக்தி அதிகரிக்கும்.

இது போன்ற ஆன்மிக, ராசிபலன், வாஸ்து கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள். முகநூல் பக்கத்தில் பின் தொடர இதை Her Zindagi கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP