மனிதனுக்கு உயிர் பெரிதா ? மானம் பெரிதா என்பதற்கு வள்ளூவர் நம்மிடம் கூறும் பதில் உயிரை விட மானமே பெரியது. மானம், மரியாதை இழந்த பிறகு வாழ்வது உயிரற்ற நிலைக்கு சமமானது. அப்படியாக உயிரை விட விழுமியதாக அதாவது அதிக மதிப்பு கொண்டதாக இருக்க மானத்தை காக்க கூடியது ஆடை. நாம் அணியும் ஆடை என்பது ஆடம்பரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் அழகானதாகவும், எல்லோரிடத்திலும் அத்தியாவசியமான தேவையாகவும் அமைகிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பது எக்காலத்திற்கும் மாற்றம் அடையாது. நம் பெற்றோர் சொல்ல கேட்டிருப்போம்... என்னோட அப்பா வருஷத்திற்கு இரண்டு முறை துணி எடுத்துக் கொடுத்தாலே பெரிய விஷயம். அதுவும் பண்டிகை நாட்களில் தான் புது ஆடை அணிவோம். அதையே வருடம் முழுக்க பயன்படுத்துவோம் என்பார்கள்.
அன்றைய காலத்தில் ஆடை மீது மதிப்பு, மரியாதை இருந்தது. பொங்கல், தீபாவளி, பிறந்தநாளின் போது கிடைக்கும் ஆடையை பார்த்தவுடன் மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டாகும். ஆடை வாங்கிய நாளில் இருந்து குறைந்தது ஒராண்டுக்கு அதை பத்திரமாக வைத்திருப்பார்கள்.
இன்றைக்கு ஆடை மீதான மதிப்பு பெரியளவு மாறியுள்ளது. சிலருக்கு இன்றளவும் புத்தாடை என்பது கனவு தான். இந்த ஆண்டில் நம்மால் புத்தாடை அணிய முடியுமா என்ற ஏக்கம் பல குழந்தைகளுக்கு இருக்கிறது. இப்படி ஏங்கும் நபர்களுக்கு ஆடையை தானமாக கொடுக்கும் போது அது அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். ஏழையிடமோ, புது துணிக்கு ஏங்கும் குழந்தையிடமோ துணி அளிக்கும் போது வெளிப்படும் மகிழ்ச்சியே இந்த ஆடை தானம்.
ஆடை தானத்தின் பலன்கள்
- கண்டாதி தோஷம் நிச்சயம் நீங்கும்
- ஆடை தானம் செய்யும் வீட்டில் இள வயது மரணங்கள் நிகழாது
- மகாலட்சுமியின் அருள் குடும்பத்தாருக்கு கிடைக்கும்
- வீட்டில் எந்த வேலை தொடங்கினாலும் அது தடைபட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் ஆடை தானம் செய்தால் அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.
- பொங்கல், தீபாவளி அல்லது உங்களது பிறந்தநாள், குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள் போன்ற நாட்களில் புது துணி எடுத்து கொடுக்கவும்.
புது துணி வாங்கி கொடுங்கள். நீங்கள் பயன்படுத்திய துணி அல்லது பயன்படுத்த முடியாத அளவில் இருக்கும் துணியை தானமாக கொடுக்காதீர்கள். இது எந்தவித பலனையும் தராது. தானம் என்பது பலனுக்காகச் செய்யும் செயல் கிடையாது. பிறர் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நாம் நன்மையை பெறுவதற்கான நல்ல செயல் ஆகும்.
இது போன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation