image

டிக் டாக் பிரபலத்தின் அந்தரங்க வீடியோ லீக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை ஓவியாவை தொடர்ந்து டிக் டாக் பிரபலம் மினாஹில் மாலிக்கின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ புனையப்பட்ட ஒன்று என மறுத்துள்ள மினாஹில் மாலிக் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
Editorial
Updated:- 2024-10-25, 15:45 IST

டிக்டாக் பிரபலமான மினாஹில் மாலிக் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்டவர். இன்ஸ்டாகிராமில் சுமார் 18 லட்சம் பாலோயர்ஸ் கொண்டவர். ஒரு சில வெப் தொடர்களில் நடித்தவர். பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் மினாஹில் மாலிக்கின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தானை சேர்ந்த இவர் சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. அந்தரங்க வீடியோ கசிவு உண்மையில்லை என்றும் இந்த விஷயம் தனது குடும்பத்தை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மினாஹில் மாலிக் அந்தரங்க வீடியோ

எக்ஸ் தளத்தில் மினாஹில் மாலிக்கின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் சில வீடியோக்களும், ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி வருகின்றன. ஆண் நபருடன் லிப் லாக் அடிக்கும் 31 விநாடி வீடியோ மற்றும் படுக்கையறையில் நிர்வாணமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன. வீடியோக்கள் மட்டுமின்றி பல புகைப்படங்களும் கசிந்துள்ளன.

மினாஹில் மீது ஆன்லைன் தாக்குதல் ?

இந்த வீடியோக்களை பலரும் இணையத்தில் பகிர்ந்ததால் ஆயிரகணக்கானோர் கண்டுகளித்துள்ளனர். வீடியோ கசிவு விவகாரம் நடப்பது முதல் முறையல்ல ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. அப்போது மினாஹில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக துணை நின்றனர்.

View this post on Instagram

A post shared by Minahil malik (@minahilmalik727)

யார் இந்த மினாஹில் மாலிக்

30 வயதான இவர் ஆன்லைன் மூலம் பிரபலமானவர். பேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனங்களை வென்றார். இவர் 1994 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி கராச்சியில் பிறந்தவர். டிக் டாக் ஸ்டார் ஹாரிஸ் அலியை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாவில் அக்டிவாக வலம் வரக்கூடிய இவர் இரண்டு மூன்று நாட்களுக்கு தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார்.

ஆபாச வீடியோவுக்கு மினாஹில் மறுப்பு

இணையத்தில் கசிந்துள்ள வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்றும் அவை புனையப்பட்டது என்றும் மினாஹில் மாலிக் மறுத்துள்ளார். அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை எனக் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பெடரல் விசாரணை அமைப்பில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க புகாரும் அளித்துள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் மினாஹில் மாலிக் நம்புகிறார். அந்த வீடியோக்களை ரிப்போர்ட் அடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிங்க ஓவியாவின் வைரல் வீடியோ உண்மையா ? போலியா ? காட்டிக்கொடுத்த டாட்டூ 

டிவி மற்றும் ஓடிடி தொடர்கள், கோலிவுட் மற்றும் பிரபலங்கள் குறித்த விஷயங்களை தெரிந்துகொள்ள ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com