முடி உதிர்தல், வெள்ளை முடி, வலுவிழுந்த கூந்தல் என முடி பிரச்சனை உங்களை பாடாய் படுத்துகிறதா?. உங்கள் முடியை இதுப்போன்ற பிரச்சனைகளிலிருந்து காப்பாற்ற எசென்ஷியல் ஆயில் என சொல்லப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள் சிலவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். இது முடிக்கு பல நன்மைகளை தருகிறது.
முடி உதிர்தல், உடைதல், வலுவிழுந்த முடி போன்றவை இன்று பொதுவாக அனைவரும் சந்திக்கும் முடி தொடர்பான பிரச்சனையாக உள்ளது. எனவே உங்கள் தலைமுடியை நீங்கள் முறையாக கவனித்து கொள்ளவும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கான முடி பராமரிப்பு வழிமுறைகள்
முடிக்கு பயன்படுத்த வேண்டிய எண்ணெய் வகைகள்
எசென்ஷியல் ஆயில் உதவியுடன் நீங்கள் வீட்டிலேயே ஹேர் டானிக் தயார் செய்யலாம். இது உங்கள் முடியை வலுவாக்கி முடி உதிர்வதை தடுக்கும். எசென்ஷியல் ஆயில் எனப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள் முடி உதிர்தலை கட்டுப்படுத்த மட்டுமல்ல முடி நன்கு வளரவும் உதவுகின்றன. இந்த எண்ணெய்களை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முடி வளர்ச்சிக்கு உதவி, முடி வெள்ளையாக மாறுவதையும் தடுக்கிறது.
லாவெண்டர் எண்ணெய்யில் இருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு போன்ற தொற்றில் இருந்து விடுபட உதவுகிறது. டீ ட்ரீ ஆயில் என அழைக்கப்படும் தேயிலை மர எண்ணெய் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை பெற்றுள்ளது . இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு போன்ற தொற்று மற்றும் பொடுகு பிரச்சனையை நீங்கி முடி நீளமாக வளர உதவுகிறது.
சிடார் எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை பெற்றிருப்பதால் இவை உச்சந்தலையில் உள்ள பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. லெமன் கிராஸ் ஆயில் என அழைக்கப்படும் எலுமிச்சைப்புல் எண்ணெய் முடியின் வேர்களை வலுவாக்குகிறது. இதில் இருக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை சரிசெய்கிறது.
உங்கள் முடிக்கு தேவையான எசென்ஷியல் ஆயிலை சரியாக தேர்ந்தெடுக்கவும். .தலைமுடிக்கு தேவைப்படுவதை முறையாக கொடுக்கவும்.
கேரியர் எண்ணெய்
எசென்ஷியல் ஆயிலை தேர்ந்தெடுத்து அதில் கேரியர் எண்ணெய்யை கலந்து பயன்படுத்தவும். கேரியர் எண்ணெய் இல்லாமல் எசென்ஷியல் ஆயிலை முடிக்கு பயன்படுத்த வேண்டாம்.
தயாரிக்கும் முறை
- தேவைக்கேற்ப ஒரு பாத்திரத்தில் எசென்ஷியல் ஆயிலை எடுத்து கொண்டு அதில் 4-5 சொட்டு ஆலிவ் ஆயிலை சேர்க்கவும்.
- பாதாம் எண்ணெய், திராட்சை எண்ணெய் ஆலிவ் ஆயில் போன்றவை கெரியர் எண்ணெய்கள் என அழைக்கப்படுகின்றன.
பயன்படுத்தும் முறை
- இப்போது உங்கள் கையை நன்கு கழுவி கொண்டு கலந்து வைத்திருக்கும் எண்ணெய்யை எடுத்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
- இதை வாரத்திற்கு 2-3 முறை தவறாமல் செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு முடி பிரச்சனை தீவிரமாக இருந்தால் முடி நிபுணர் அல்லது மருத்துவரை பார்ப்பது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik