herzindagi
thong panties  for  women tips

Thong Panties Side Effects: thong panties அணிவதால் இவ்வளவு பாதிப்பா?

thong panties, நமது ஆரோக்கியத்திற்கும் பிறப்புறுப்புக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிபுணர்களிடமிருந்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
Editorial
Updated:- 2023-08-27, 10:08 IST

காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது, தினமும் டீ குடிப்பது, செய்தித்தாள் படிப்பது, சரியான நேரத்தில் உணவு உண்பது அல்லது உள்ளாடை அணிவது என பல விஷயங்களுக்கு நம் உடல் பழகிக் கொள்கிறது. ஏனென்றால், ஒரு விஷயத்தைத் திரும்ப செய்யும்போது, அது பழக்கமாகிவிடும், அதைச் செய்யாத நாளில், ஏதோ முழுமையடையாதது போன்ற உணர்வு உண்டாகும். பெண்கள் சில சமயங்களில் ப்ரா அணிய மாட்டார்கள், ஆனால் பேன்டி அணிவதை தவிர்க்க மாட்டார்கள்.

நாம் சவுகரியத்துக்காக அல்லது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க உள்ளாடைகளை அணிகிறோம். அதனால்தான் பல பெண்கள் பலவிதமான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள், சில பெண்கள் thong panties போன்ற கவர்ச்சியான உள்ளாடைகளை அணிய விரும்புகிறார்கள். ஆனால் பக்கவிளைவுகள் பற்றி அறியாமல் வித விதமான உள்ளாடைகளை அணிவது, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? thong panties, அதாவது உள்ளாடைகள் எவ்வாறு நமது ஆரோக்கியத்திற்கும் பிறப்புறுப்புக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிபுணர்களிடமிருந்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

Thong Panty அணிவதால் பிறப்புறுப்பு பிரச்சனை வருமா?

thong panties அணிவதால் பிறப்புறுப்பில் பிரச்சனைகள் ஏற்படும். பெண்ணுறுப்பில் இருந்து ஒரு வாடை வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நீங்கள் thong panties அணிந்தால், பிறப்புறுப்பில் இருந்து வரும் வாடையில் வித்தியாசம் இருக்கும். உண்மையில் thong உள்ளாடை துணி காற்றை ஆதரிக்காது. இதன் காரணமாக ஈரப்பதம் உள்ளேயே இருக்கும். இதனால் பிறப்புறுப்பிலிருந்து விசித்திரமான வாடை வரத் தொடங்குகிறது.இது பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்றுக்கும் வழிவகுக்கும். யோனி ஈஸ்ட் தொற்று என்பது ஒரு வகையான கேண்டிடியாஸிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் thong panty அணிவதை தவிர்க்கவும்.

panties hyien

உங்களிடம் செயற்கை அல்லது நைலான் உள்ளாடைகள் அதிகமாக இருந்தால், அவற்றை தூக்கி எறிய வேண்டிய நேரம் இது. ஏனெனில் செயற்கை துணி ஈரப்பதத்தை உருவாக்குகிறது. மேலும் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும் இதனால் துர்நாற்றம் பிரச்சனையும் உண்டாகிறது. எனவே நீங்கள் இது போன்ற உள்ளாடைகள் அணிவதைத் தவிர்த்துவிட்டு, வசதியான உள்ளாடைகளை அணிவதை நல்லது.

thong panties அணிவதால் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும்

thong pantyயின் துணி குறைந்த ஈரப்பதத்தை உறிஞ்சும். இதனால் உள்ளாடை எப்போதும் ஈரமாக இருக்கும் என்பதை பார்த்தோம். ஈரம் காரணமாக உங்கள் பிறப்புறுப்பை சுற்றி அரிப்பு ஏற்படலாம். மேலும், பேண்டியின் மெல்லிய கோடு யோனி எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இந்த பேண்டியை தினமும் அணிய வேண்டாம், ஒருவேளை நீங்கள் தினமும் அணிந்தால், பராமரிப்பு மிகவும் முக்கியம். ஒருவேளை ஈரமாக இருந்தால், அரிப்பு பிரச்சனை அடிக்கடி உண்டாகலாம்.

மெல்லிய மற்றும் இறுக்கமான thong panties அணிவதைத் தவிர்க்கவும்

நீங்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும். ஏனெனில் இறுக்கமான உள்ளாடையின் துணியானது அடிவயிற்றிற்கும், மலவாய்க்கும் இடைப்பட்ட பகுதியை கட்டுப்படுத்துகிறது. இதனால் பிறப்புறுப்பில் தொற்றுநோய் உண்டாகலாம். எனவே, நீங்கள் தவறான அளவு உள்ளாடையை தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் சரியான அளவில் உள்ளாடையை தேர்வு செய்யாவிட்டால், அது உங்கள் அந்தரங்க பகுதியைப் பாதுகாக்க உதவாது. அது நீங்கள் அணிந்திருக்கும் ஆடை மீதும் ஒருவித அசவுகரியத்தை உண்டாக்கும். உள்ளாடைகள் மிகவும் இறுக்கமாக இருந்தால், அது உங்கள் தோலைக் கிள்ளும். மிகவும் தளர்வாக இருந்தால், அது பொருத்தமற்ற ஆடையாக உணர வைக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com