Hair Care: பெண்களே அழகான கூந்தல் வளர்ச்சிக்கு வேப்பம் பூ எண்ணெய் பயன்படுத்துங்கள்!

பாரம்பரியமிக்க வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தி பெண்களின் தலைமுடி வளர்ச்சியை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 
neem benefits

பாரம்பரிய பழங்காலத்தில் இருந்தே கூந்தலின் ஆரோக்கியத்திற்காக வேப்பம்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயற்கை மற்றும் கரிம பொருட்களின் ஒன்றாகும். ஆயுர்வேத மருத்துவத்தின் மிக முக்கியமான பொருள் வேப்பம்பூவாகும். வேப்பஞ்செடியிலிருந்து எண்ணெயை எடுத்து உங்கள் தலை முடிக்கு நீங்கள் பயன்படுத்தும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது தரும். வேப்பம்பூ கலந்த பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் நாம் வேப்பம்பூ எண்ணெயையை வீட்டிலேயே எளிதில் கூந்தல் பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

கூந்தலுக்கு வேப்ப எண்ணெய்

neem oil  benefits for woman

வேப்ப மரத்தில் இருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் தினசரி பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அதன் அருமை கிராமப்புற பெண்களுக்கு மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வேப்ப எண்ணெயில் கொட்டி கிடக்கின்றன. வேப்ப மரம் பல்வேறு வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது தோல் மற்றும் முடி பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது.

வேப்ப எண்ணெய் என்றால் என்ன?

வேப்ப எண்ணெய் என்பது வேப்பஞ்செடியின் பழத்தை அழுத்தும் போது கிடைக்கும் கொட்டையை காய வைத்து அதில் இருந்து எடுக்கப்படுவதாகும். வேப்ப எண்ணெயில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை முடி மற்றும் தோல் இரண்டையும் பராமரிக்க பயன்படுகிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வேப்ப எண்ணெய் எப்படி பயன்படுத்தலாம்?

  • முடி வளர்ச்சிக்கு வேப்ப எண்ணெயை தாராளமாக பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயை உங்கள் விரல் நுனியில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இப்படி செய்யும் போது உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் வேப்ப எண்ணெயை உச்சந்தலை குளிரும் வகையில் தடவி மசாஜ் செய்யவும்.
  • பொடுகு சிகிச்சைக்கு வேப்பஎண்ணெயைபயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் மசாஜ் செய்தால் தலையில் உள்ள பொடுகு தொல்லை படிப்படியாக குறைய தொடங்கும். குறிப்பாக தூங்குவதற்கு முன்பு இந்த மசாஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் வேப்ப எண்ணெய் உங்கள் தலையில் பரவி உச்சந்தலையை குளிர்வித்து. பொடுகுகளின் செயல்பாட்டை நாளடைவில் குறைக்கும்.
  • உங்கள் தலை முடியை சீரமைத்து முடி உதிர்வதை கட்டுப்படுத்த வேப்பஎண்ணெயைபயன்படுத்தவும். உங்கள் உச்சந்தலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் இருப்பதால் வேப்ப எண்ணெயை தடவும் போது தலையில் உள்ள நச்சுக்கள் குளிக்கும் போது வெளியேறும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணையை உச்சந்தலையில் தடவி நாம் தூங்கும்போது பல்வேறு நன்மைகளை பெறலாம்.
  • உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்த வேப்ப எண்ணெய் பெரிதும் உதவும். குறிப்பாக தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் அழற்சிகளை சரி செய்ய வேப்ப எண்ணையை உச்சந்தலையில் தடவி விட்டு வெந்நீரில் குளித்து லேசான துணிகளை வைத்து தலையை மசாஜ் செய்யும் போது தலையில் ஏற்பட்டுள்ள தொற்றுகள் உடனடியாக சரி செய்யப்படும். மேலும் இனிமேல் தலையில் தொற்றுகள் வராத அளவிற்கு வேப்ப எண்ணெய் பாதுகாக்கும்.
  • உச்சந்தலையில் வேப்ப எண்ணையை தடவி சீப்பை கொண்டு சீவும் போது தலையில் உள்ள பொடுகுகள் நாள்பட்ட பெண்கள் உதிர்ந்து விழும்.
  • தலைமுடி வேர்கள் மயிர் கால்களை வலுப்படுத்த முடி உடைவதை குறைக்க வேப்ப எண்ணெயைதினசரி நாம் பயன்படுத்தலாம் தலைமுடி நரைத்துப் போவதை தடுக்க வேப்ப காலையில் குளிக்கும் போது தலையில் தடவி வெந்நீரில் குளித்தால் பலனளிக்கும்.
  • வேப்ப இலைகளை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரில் நீங்கள் குளிக்கலாம் இப்படி வாரம் இருமுறை குளித்து வந்தால் உங்கள் முடி வளர்ச்சி மேம்படும்.
வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம்பூவை பயன்படுத்தி பெண்கள் தங்களின் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தவும், தலைமுடியில் வரும் பொடுகு தொல்லை, பேன் தொல்லை தொற்று பிரச்சனைகளை சரி செய்ய வாரம் மூன்று முறை வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம்பூவை பயன்படுத்தி பெண்கள் நலன் பெறலாம்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP