குளிர்காலம் தொடங்கியாச்சு. தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் குளிர் அதிகமாக இருக்கிறது. பொதுவாக குளிர்காலம் என்றாலே இயற்கையாகவே உடலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக சருமத்தில் சுருக்கங்கள், விரிசல்கள், சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்ற முடியாமல் போவது போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரின் போன்ற பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குளிர்காலத்தில் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் தேங்காய் எண்ணெய்களை பல வழிகளில் பயன்படுத்தலாம். அவற்றில் சில உங்களுக்காக..
மேலும் படிக்க: இந்த பொருட்களை தேனில் கலந்து தடவினால், உங்கள் முகம் ஜோராக ஜொலிக்கும்!
கோடை காலங்களை விட குளிர்காலத்தில் சருமம் உடனே வறண்டு போய்விடும். சருமம் வறட்சி அடையும் போது தோல் உரிதல், வெடிப்பு போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இவற்றை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் தேங்காய் எண்ணெயில் கிளிசரின் கலந்து சருமத்தில் அப்ளை செய்யவும். தேங்காய் எண்ணெய் மற்றும் கிளிசரின் இரண்டும் சருமத்தை ஈரப்பதமாக்கி வறட்சி நீக்க உதவியாக இருக்கும். மேலும் குளிர்காலத்தில் கூட சருமத்தில் பொலிவுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும். இதோடு தேங்காய் எண்ணெய்யில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
மேலும் படிக்க: 30 வயதை அடைந்துவிட்டீர்களா? கட்டாயம் இந்த அழகுக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்
அடுத்தப்படியாக குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், தேங்காய் எண்ணெயில் காபி தூள் மற்றும் சிறிதளவு உளுத்தம்பருப்பு சேர்த்து முகத்தில் பேஸ் மாஸ்க் போன்று அப்ளை செய்யவும். பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு பேஸ் மாஸ்க்கை அகற்றவும். இவ்வாறு சருமத்தைப் பாதுகாக்க பயன்படுத்தப்படும் இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுவதோடு சருமத்தை மென்மையாக்க உதவியாக இருக்கும்.
குளிர்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் சில நேரங்களில் சருமத்தில் ஈரப்பதமின்றி காணப்படும். இந்த பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்றால், சரும நீரேற்றத்திற்கு உதவக்கூடிய அழகு சாதனப்பொருட்களை இரவு நேரத்தில் மட்டும் பயன்படுத்த முயற்சிக்கவும். குளிர்காலத்தில் அடிக்கடி சோப்பு போட்டு முகங்களைக் கழுவக்கூடாது. சில சோப்புகளில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தை விரைவாக வறண்டு விட செய்யும்.
மேலும் படிக்க: இயற்கையான முறையில் சரும பொலிவைப் பெற இந்த 5 ஜூஸ்கள் போதும்
மேலும் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்றால் அதிகளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொள்ள வேண்டும். குளிர்காலம் தானே தண்ணீர் தண்ணீர் குடிக்காமல் இருக்ககூடாது. எந்தளவிற்கு தண்ணீர் குடிக்கிறீர்களோ? அந்தளவிற்கு சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் உணவு முறையில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com