30 வயதை அடைந்துவிட்டீர்களா? கட்டாயம் இந்த அழகுக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்

20 களில் துள்ளித்திரிந்தாலும் 30 வயதை அடைந்தாலே உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் சோர்வை சந்தித்து விடுவோம். வயதாகிவிட்டதோ என்ற நினைப்பு நிச்சயம் அனைவருக்கும் எழக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு தன்னுடைய அழகின் பாதியை இழந்துவிட்டதாக எண்ணத்தொடங்குவார்கள். இதைத் தவிர்க்கவும் எப்போதும் போல முக பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால், 30 வயது வந்தவுடன் சில முக்கிய அழகுக்குறிப்புகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
image
image

பெண்கள் எப்போதுமே தங்களை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதிலும் 30 வயது வந்துவிட்டால் சருமத்திற்கு சேதம் விளைவிக்கும் அனைத்துக் காரணிகளிலிருந்தும் பாதுகாப்போடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எந்தளவிற்குக் கவனம் செலுத்துகிறீர்களோ? அதே கவனத்தை சரும பராமரிப்பிற்கும் கொடுப்பது முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்பட்டு ஒட்டு மொத்த அழகையும் இழக்க நேரிடும். இதோடு மட்டுமின்றி தோலில் உள்ள கொலாஜன் இழக்கப்பட்டு சருமத்தின் இளமைத்தன்மையையும் போய்விடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் சில முக்கிய அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவற்றில் சில உங்களுக்காக..

30 வயதில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய அழகுக்குறிப்புகள்:

வைட்டமின் சி சீரம்:

பெண்கள் 30 வயதிற்குப் பிறகு வைட்டமின் சி சீரம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக காலையில் வைட்டமின் சி சீரத்தை சருமத்தில் அப்ளை செய்யும் போது ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காற்று மாசுபாட்டால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக அகற்ற உதவுகிறது. மேலும் சருமத்தைப் பொலிவாக்குவதற்கும், சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்கும், முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளைக் குறைப்பதற்கும் சீரம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

beauty hacks

மேலும் படிக்க:one minute saree tips in tamil: டீன் ஏஜ் பெண்கள் அதிகம் விரும்பும் 'One Minute Saree' எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?

சன்ஸ்கிரீன்:

வெயில்காலமாக இருந்தாலும், குளிர்காலமாக இருந்தாலும் எவ்வித தயக்கமும் இன்றி சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக 30 வயதிற்குப் பிறகு நேரடி சூரிய ஒளி பாதிப்பைத் தவிர்ப்பது அவசியமான ஒன்று. இதற்கு சன்ஸ்கிரீன் சிறந்த தேர்வாக உள்ளது. இருந்தப்போதும் அனைத்து சன்ஸ்கிரீன்களும் அனைவரும் பொருந்தாது. உங்களது தோல் வகைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.

இதோடு மட்டுமின்றி எந்த வயதிலும் சருமத்தில் பிரச்சனைகள் இன்றி இருக்க வேண்டும் என்றால், சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிகளவு தண்ணீர் குடிப்பதோடு தோல் மருத்துவரின் ஆலோசனையின் படி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். மேலும் 20களில் இருந்தது போன்று கிடைத்ததைச் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் கைவிடுவது நல்லது.

skin care routine

மேலும் படிக்க:எப்போதும் இளமையாக இருக்க இந்த 5 ஸ்டைலிங் டிப்ஸைப் பின்பற்றுங்கள், உங்கள் வயதை யாராலும் யூகிக்க முடியாது!

காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கட்டாயம் முகத்தைக் கழுவ வேண்டும். சந்தைகளில் கிடைக்கும் கண்ட கண்ட அழகுச்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்களது சருமத்திற்கு ஏற்ற வகையிலான அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP