முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்காக சரும பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில், நமது சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கூடிய 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறையை காணலாம்.
மேலும் படிக்க: முகத்தை போல உச்சந்தலைக்கு ஸ்க்ரப் செய்வதால் கிடைக்கும் 5 நன்மைகளை பற்றி பார்க்கலாம்
பெரும்பாலனவர்களுக்கு செயற்கையான முறையில் இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கு தயக்கம் இருக்கும். ஏனெனில், அவற்றில் இருந்து ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் காணப்படும். அதற்கு மாற்றாக, இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ்பேக்குகளை பயன்படுத்தலாம்.
முதலாவதாக ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இனி, முகத்தில் இருக்கும் கருமையான இடங்களில், இந்தக் கலவையை தடவி விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவதுப்பான நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ்பேக் முகத்திற்கு இன்ஸ்டன்ட் பொலிவை கொடுக்கும். மேலும், தேன் சேர்க்கப்பட்டிருப்பதால் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
நன்கு ஃப்ரெஷ்ஷான வெள்ளரிக்காய்களை வெட்டி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சாறு வரும் வரை அரைக்க வேண்டும். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இவற்றை நன்றாக கலந்து, ஒரு சிறிய துண்டு காட்டனில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும். அதற்கடுத்து, சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். வெள்ளரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து முகத்தை வறட்சியாக்காமல் தடுப்பதுடன், ரோஸ் வாட்டர் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, முகத்தில் இருக்கும் கருமை மறையும்.
இந்த ஃபேஸ்பேக் செய்வதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள், இரண்டு டேபிள் ஸ்பூன் பால் அல்லது தயிர் ஆகியவற்றை பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவிய பின்னர், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். சருமத்தில் இருக்கும் டெட் செல்களை அகற்றும் ஆற்றல் கடலை மாவில் இருக்கிறது. மேலும், பால் அல்லது தயிர் முகத்தில் இருக்கும் கருமையை போக்க உதவுகிறது.
மேலும் படிக்க: சருமத்தில் இருக்கும் கிருமிகளை போக்கி முகத்தை பளபளப்பாக மாற்ற உதவும் கடல் உப்பு
இரண்டு டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் கற்றாழை ஜெல்லுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு கலக்க வேண்டும். இதனை கழுத்து மற்றும் முகத்தில் தடவிய பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வெயிலால் ஏற்பட்ட கொப்பளங்களை அகற்ற கற்றாழை ஜெல் பயன்படும். தக்காளியில் இருக்கும் லைகோபின், கருமையை நீக்கும்.
உருளைக் கிழங்கை துருவிய பின்னர், இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவிக் கொள்ளலாம். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி பார்த்தால் பொலிவாக காட்சி அளிக்கும். இது முகத்தில் இருக்கும் கருமையை அகற்றி, சருமத்தை மிருதுவாக்குகிறது.
இந்த ஃபேஸ்பேக்குகளை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதற்கு முன்பாக ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்கவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com