herzindagi
ice water

Ice Water Facial: ஐஸ் தண்ணீரில் ஃபேஷியல் செய்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

ஐஸ் தண்ணீரில் ஃபேஷியல் செய்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-04-15, 17:03 IST

பல பெண்களும் சமீப காலமாக முகத்தின் அழகுக்காக ஐஸ் தண்ணீரில் ஃபேஷியல் செய்து வருகின்றனர். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் ஒரு சில பாலிவுட் நடிகைகள் கூட மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் தண்ணீர் பேஷியலை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. நம் முகத்திற்கு ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செய்வது எப்படி?

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை சிறு துண்டுகளாக போட்டு அதில் சிறிய அளவு ஜில் தண்ணீர் ஊற்றவும். இப்போது இந்த ஐஸ் கட்டிகள் சிறிது உருகிய பின் அந்த பாத்திரத்தில் உங்கள் முகத்தை வைத்து சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும். இதே போல மீண்டும் ஒரு முறை முகத்தை இந்த ஐஸ் வாட்டர் பாத்திரத்தில் வைக்க வேண்டும். இப்படி மூன்று அல்லது நான்கு முறை செய்து வந்தால் சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். 

ice cube

மேக்கப் நீடிக்கும்: 

ஐஸ் தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்துவதால் உங்கள் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் அப்படியே நீடிக்கும். பெரும்பாலான கொரிய அழகு குறிப்புகளில் ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் முகத்தை மூன்று அல்லது நாலு நிமிடங்கள் ஐஸ் தண்ணீரில் நனைத்து ஒரு மென்மையான துண்டு வைத்து முகத்தில் மெதுவாக துடைக்க வேண்டும். இப்படி செய்த பிறகு நீங்கள் மேக்கப் அப்ளை செய்யலாம். 

மேலும் படிக்க: பொலிவான சருமம் வேணுமா? தினசரி நெய் பயன்படுத்துங்க..!

சிவப்பு புள்ளிகள் குறையும்:

ஐஸ் தண்ணீரில் உங்கள் முகத்தை வைப்பதன் மூலம் உங்கள் சருமத்தில் உள்ள சிவப்பு புள்ளி பிரச்சனைகள் குறைய உதவுகிறது. மேலும் இந்த ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செய்து வந்தால் முகத்தில் ரத்த ஓட்டம் தற்காலிகமாக தடுப்பதன் மூலம், நம் கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்பட்டால் குறையும் என்று கூறப்படுகிறது. 

முகத்தின் வீக்கம் குறையும்:

அதிகமாக சூரிய ஒளியில் வெளியே செல்லும் பெண்களுக்கு தோல் அடிக்கடி சிவந்து போதல், அரிப்பு, எரிச்சல் போன்ற சரும அழற்சி பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செயல்முறையை செய்து வந்தால் ரத்த நாளங்களை சுருக்கி அதன் மூலம் தோல் பிரச்சனைகள் குறைய செய்கிறது. மேலும் தோல் சார்ந்த பிரச்சினைகள், முக வீக்கம் மற்றும் எரிச்சல் போன்ற சரும பிரச்சனைகளும் இந்த ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செய்து வந்தால் நாளடைவில் குணமாகும் என்று கூறப்படுகிறது. 

துளைகளை இறுக்கமாக்கும்: 

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செய்து வந்தால் உங்கள் முகத்தில் ஏற்படும் துளைகளை இறுக்க முடியும். இந்த ஐஸ் தண்ணீர் ஃபேஷியல் செய்வதால் உங்கள் சருமம் மிருதுவாகி சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பசை குறைந்து இயற்கையாகவே முகம் பொலிவு பெறும். இதனால் உங்கள் முகத்தில் முகப்பருக்கள் வராமல் பாதுகாக்க முடியும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com