
நம்மில் பலருக்கும் தினசரி உணவில் நெய் ஊற்றி சூடான சாதம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. குறிப்பாக நாம் உணவுக்காக பயன்படுத்தும் பல உணவு பொருட்களில் நெய் மிக முக்கியமான ஒன்று ஆகும். இந்த நெய்யை பயன்படுத்தி நாம் சமைக்கும் உணவு வகைகள் சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க உதவுகிறது. அதே போல எந்த உணவில் நெய்யை சேர்த்தாலும் அதன் சுவை பல மடங்கு அதிகரிக்க கூடும். அந்த அளவிற்கு நெய் நம் உணவின் தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் நம் உணவை தவிர இந்த நெய் நம்முடைய சரும பொலிவுக்காகவும் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் இருந்தபடி இயற்கையான பளபளப்பான சருமத்தை மேம்படுத்த நெய்யை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கும் அவர்கள் சருமத்தை முறையாக பராமரிக்க தெரியாது. ஒரு சிலர் சருமத்திற்கு கவனம் செலுத்தினாலும் மார்க்கெட்டில் கிடைக்கும் ரசாயனம் கலந்த அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது முக பொலிவை கொடுத்தாலும் பிற்காலத்தில் எதிர்பாராத அளவுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்த நிலையில் நம் சருமத்தை பராமரிக்க வீட்டில் கிடைக்கும் தினசரி பொருட்களை வைத்து பயன்படுத்தலாம். இந்த நிலையில் நம் வீட்டில் இருக்கும் நெய்யை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
நமது சருமத்தை மென்மையாக்கி நம் முகத்தில் உள்ள கருவளையம், பருக்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்கும் ஊட்டச்சத்துக்கள் இந்த நெய்யில் நிறைந்துள்ளது. ஒரு சிலருக்கு முகப்பரு வந்தால் அது எளிதில் போகாது. அந்த முகப்பரு நாளடைவில் முகத்திலேயே தங்கி விடுகிறது. இதன் பிறகு அது தழும்புகளாக மாறிவிடும். இந்த நிலையில் இவர்கள் முகத்தில் நெய்யை தடவி வரலாம். இந்த நெய்யில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
நாம் தினசரி பயன்படுத்தும் நெய்யில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து பளபளப்பான சருமத்தை அளிக்க உதவுகிறது. அதே போல நம் உடலில் உள்ள தோல் சுருக்கங்களை நீக்குவதற்கும் நெய்யில் உள்ள வைட்டமின்கள் பெரிதும் உதவுகிறது. இதனால் உங்களுக்கு வயதானாலும் இளமையான தோற்றத்திலேயே இருக்க நெய் உதவும்.
அதிக வெப்பத்தில் தினசரி சமையலறையில் இருக்கும் பெண்களுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் அவர்கள் முகத்தில் சுருக்கங்களும் அரிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நேரங்களில் முகத்தில் நெய் தடவி வந்தால் முகத்தின் பொலிவை மீட்டெடுக்கலாம்.
ஒரு சில பெண்களுக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இருக்கும். இவர்கள் தினசரி சருமத்தில் நெய்யை தடவி வந்தால் சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க உதவும். அதே போல தினமும் உதட்டில் நெய் தடவி வந்தால் உதடு வெடிப்பு பிரச்சனைகள் நாளடைவில் குணமாகும். தினமும் இரவு தூங்குவதற்கு முன் கண்களை சுற்றி நெய் தடவி வந்தால் கருவளையம் விரைவில் நீங்கும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
