Oily Skin Toner: ஆயில் ஸ்கின்னா உங்களுக்கு.. எண்ணெய் பிசுபிசுப்பை போக்க சூப்பரான டோனர்!!

சருமத்தில் இருக்கும் துளைகளை குறைத்து முகத்தை புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்க இந்த ஃபேஸ் டோனரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

face toner big image
face toner big image

சருமத்தை பராமரிக்க பல்வேறு பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன இவற்றில் ஒன்று டோனர். டோனர் இப்போது சரும பராமரிப்பின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. எண்ணெய் பசை சருமத்தில் வெள்ளை புள்ளிகள், முகப்பருக்கள் எளிதில் ஏற்படும். எனவே சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்துவதும் அவசியம். இதற்கு டோனர் பயன்படுத்த வேண்டும்.

இதற்காக நீங்கள் சந்தையில் இருந்து டோனர் வாங்க தேவையில்லை. வீட்டிலேயே எண்ணெய் சருமத்திற்கு டோனரை எவ்வாறு தயாரிப்பது என்று பார்க்கலாம். டோனர் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும், சருமத்திற்கு ஏற்ப டோனரைப் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளரிக்காயிலிருந்து டோனர் தயாரிக்கலாம்

cucumber for oily skin

வெள்ளரிக்காயை முகத்தில் தடவுவதால் பல நன்மைகள் உள்ளன. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது. அதுமட்டுமின்றி வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட டோனர் எண்ணெய் பசை சருமத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 வெள்ளரி
  • பன்னீர்
  • சுத்தமான துணி

செய்முறை

  • 1 வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைக்கவும்.
  • இந்த பேஸ்ட்டை சுத்தமான துணியில் போட்டு பிழிந்து எடுக்கவும்.
  • இந்த சாற்றை ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
  • அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.


உபயோகிக்கும் முறை

  • முதலில் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும்.
  • பின் டோனரைப் பயன்படுத்தவும்.
  • இதைப் பயன்படுத்தினால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை குறைக்கும்.

அலோ வேரா ஜெல் டோனர்

aloe vera for oily skin

கற்றாழை ஜெல் சருமத்திற்கு ஒரு வரம் என்று சொன்னால் தவறில்லை. ஏனெனில் இதனை பயன்படுத்துவதால் பல சரும பிரச்சனைகள் குறைகிறது.

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் அலோ வேரா ஜெல்
  • 1/2 கப் ரோஸ் வாட்டர்

செய்முறை

  • அலோ வேரா ஜெல்லை புதிய செடியிலிருந்து பிரித்தெடுக்கவும்.
  • கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  • அதில் 1/2 கப் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
  • இரண்டையும் நன்றாகக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும்.
  • உங்கள் சருமத்தை டோன் செய்ய விரும்பும் போதெல்லாம் இந்த டோனரைப் பயன்படுத்தவும்.

அலோ வேரா ஜெல் டோனரின் நன்மைகள்

  • சருமம் எண்ணெய்ப் பசையாக மாறாது.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறையும்.
  • முகத்தில் முகப்பரு இருந்தால் கற்றாழை ஜெல்லால் செய்யப்பட்ட இந்த டோனரைப் பயன்படுத்தவும்.

குறிப்பு: தோலில் எதையும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் அந்த தயாரிப்பு உங்கள் சருமத்திற்கு பொருந்துமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP