முகத்தில் உள்ள கருமையை நீக்க தக்காளி பழம் போதும்!

தக்காளியை மற்ற பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து முகம் மற்றும் சருமத்தில் பயன்படுத்தினால் கருமையை எளிதாக நீக்கிவிடலாம்.

tomato face packs
tomato face packs

முகத்தில் உள்ள கருமையை நீக்க விடுபட இயற்கையான வழியைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால் உங்கள் அழகு குறிப்பில் தக்காளியைச் சேர்க்கத் தொடங்குங்கள். தக்காளி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது மற்றும் பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் மிகவும் நிறைந்துள்ளது. தக்காளி முகத்தில் இருந்து கருமையை அகற்ற உதவுகிறது. இதை பிற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தும் போது கூடுதல் பயன்கள் கிடைக்கின்றன.

homemade tomato face mask

தக்காளி, ஓட்ஸ், தயிர்

செய்முறை

  • சில தக்காளி எடுத்து அதை நன்கு மசித்து கூழ் போல் மாற்றவும்
  • இப்போது தலா ஒரு ஸ்பூன் ஓட்ஸ், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
  • இந்த கலவையை முகத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவவும்
  • 20 நிமிடங்களுக்கு அப்படியே இருக்கட்டும், அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்
  • வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்யுங்கள்

தக்காளி, யோகர்ட், எலுமிச்சை

செய்முறை

  • ஒரு தக்காளியை பாதியாக வெட்டி அதில் இருந்து ஜூஸ் எடுத்து பாத்திரத்தில் போடவும்
  • இதில் தற்போது தலா மூன்று ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட் சேர்க்கவும். பேஸ்ட் போல மிக்ஸ் செய்யவும்.
  • இதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்.
  • சாதாரண தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவும்
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்யவும்

தக்காளி, முல்தானி மெட்டி

  • தக்காளி கூழ் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து கெட்டியாக கலக்கவும்
  • முகத்தில் இந்த கலவையை தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்
  • இதை தடவிய பிறகு அதிகம் பேசக் கூடாது, முக அசைவுகள் கூடாது. ஏனெனில் அது சுருக்கங்களுக்கு வழிவகுக்கும்.
  • 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

தக்காளி, சந்தனம், எலுமிச்சை

  • தக்காளிகளை நன்கு அரைத்து தக்காளி ஜூஸ் போடவும், இதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் மூன்று ஸ்பூன் சந்தனம் சேர்க்கவும்
  • இதை பேஸ்ட் போல மாற்றி கழுத்து மற்றும் முகத்தில் தடவவும்
  • 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்

தக்காளி, பால்

  • ஒரு பாத்திரத்தில் தக்காளிகளை நன்கு மசித்து ஆறு ஸ்பூன் பால் சேர்க்கவும்
  • இதை உங்கள் முகத்தில் தடவுங்கள்
  • ஐந்து நிமிடங்களுக்கு முகத்தில் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் கழுவவும்

தக்காளி, எலுமிச்சை சாறு

  • எலுமிச்சை சாறுடன் தக்காளி ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவவும்
  • முகத்தில் இவை நன்கு ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

தக்காளி, மஞ்சள்

  • மூன்று ஸ்பூன் தக்காளி ஜூஸுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  • முகத்தில் இந்த கலவை ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்
  • வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யுங்கள்

தக்காளி, பால், கற்றாழை

  • பெரிய பாத்திரத்தில் ஒரு தக்காளியை நன்கு மசித்து மூன்று ஸ்பூன் பால் பவுடர் அல்லது கெட்டியான பால் மற்றும் பத்து ஸ்பூன் கற்றாழை சாறு சேர்க்கவும்
  • இதை உங்கள் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு தடவி அப்படியே விடுங்கள்.
  • குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP