உடல் சூட்டை தணிக்கும் இளநீர் தலைமுடிக்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்க கூடியது. இதனால் முடி உடைவது தடுக்கப்படுகிறது. இளநீர் ஒரே நேரத்தில் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது, முடி உதிர்வையும் குறைக்கிறது.
இளநீரை கொண்டு தலைமுடியைக் கழுவுவது முடி பராமரிப்புப் பொருட்களுக்கு இயற்கையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் மாற்றாகும். அதாவது இளநீரில் இருக்கும் தண்ணீர் சுவையான பானம் மட்டுமல்ல தலைமுடிக்கும் எண்ணற்ற நன்மைகளையும் வழங்குகிறது. முடி பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இளநீரை கொண்டு முடியை கழுவும் போது உச்சந்தலைக்கு ஆழமான நீரேற்றம் கிடைக்கிறது. இயற்கையான நீரேற்றம் வறட்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது
இளநீரின் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி உடையும் வாய்ப்பைக் குறைக்கின்றன. ஸ்டைலிங் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் முடி சேதமும் இளநீரை பயன்படுத்துவதால் குறைகிறது.
இளநீரில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான மற்றும் வலுவான முடி வளர்ச்சியைத் ஆதரிக்கின்றன.
மேலும் படிங்க முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி எண்ணெய்யை எப்படி பயன்படுத்தலாம்
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மோசமான உச்சந்தலை ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் முடி உதிர்வுக்கு வழிவகுக்கலாம். இளநீரின் ஊட்டமளிக்கும் பண்புகள் முடி உதிர்வைக் குறைக்கும் சிக்கல்களை தீர்க்கும். இளநீர் வேரிலிருந்து தலைமுடியை பலப்படுத்துகிறது
இளநீரின் நீரேற்றம் மற்றும் சீரமைப்பு விளைவுகள் பிரகாசமான தலைமுடிக்கு பங்களிக்கின்றன. இளநீரின் தொடர் பயன்பாடு மந்தமான மற்றும் உயிரற்ற முடியை பளபளப்பாகவும் துடிப்பானதாகவும் மாற்றும். இது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைக்கிறது.
முடி உதிர்வுக்கு பெரும்பாலும் நீரிழப்பு மற்றும் ஈரப்பதம் இல்லாதவை முக்கிய காரணங்களாகும். இளநீர் முடி இழைகளை ஈரப்பதமாக்குவதன் மூலம் இயற்கையான தீர்வை தருகிறது. கடுமையான இரசாயனங்கள் கொண்ட தலைமுடி பயன்பாட்டு பொருட்களை போல் இல்லாமல் இளநீரை தலைமுடியில் பயன்படுத்தினால் மென்மையாக இருக்கும். இளநீரை ஹேர் வாஷ் ஆக பயன்படுத்துவது இயற்கையான சுத்திகரிப்பு அனுபவத்தை தருகிறது.
மேலும் படிங்க பளபளப்பான சருமத்திற்கான எளிய அழகு குறிப்புகள்
முடி உதிர்வுக்கு இளநீரை பயன்படுத்துவது நல்லதாகும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் அதன் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முடி இழைகளை வலுப்படுத்த உதவுகிறது. இறுதியாக முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com