herzindagi
silky hair card

Silky Hair: வறண்ட கூந்தலை பட்டு போல மென்மையான கூந்தலாக மாற்ற சிம்பிள் டிப்ஸ்!!

முடி வறண்டு போகாமல் சரியான முறையில் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இதற்கு வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
Editorial
Updated:- 2023-08-11, 20:43 IST

முடியை அழகாக வைத்திருக்க தினமும் பல்வேறு முடி பராமரிப்பு சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். அதே சமயம் வானிலை மாற்றத்தால் பல சமயங்களில் நம் தலைமுடி வறண்டு போகும். அதற்காக கூந்தலைப் பராமரிப்பதற்கு சந்தையில் பல வகையான பொருட்களை நம் தேடி செல்கிறோம். வெளியில் கிடைக்கும் இந்தப் பொருட்களில் பல வகையான ரசாயனம் நிறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கூந்தலுக்கு ஊட்டமளிப்பதற்குப் பதிலாக அதை உயிரற்றதாகவும் வறட்சியடையச் செய்யும். 

வீட்டில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் இன்று உங்களுக்கு ஒரு வீட்டு வைத்தியம் சொல்லப் போகிறோம். அதன் பயன்படுத்துவதன் மூலம் கூந்தலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும். மேலும் உங்கள் தலைமுடி அழகாக இருக்கும். கூந்தலுக்கு வலு சேர்க்கும் அந்த விசயம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

 இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள்!!

உலர்ந்த கூந்தலை சரிசெய்ய தேவையான பொருட்கள் 

  • தேன்
  • தயிர்
  • அலோ வேரா ஜெல்

உலர்ந்த கூந்தலுக்கு தேனின் நன்மைகள்

honey hair

  • தேன் முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது.
  • இழந்த முடியின் பொலிவை மீண்டும் பெற உதவுகிறது.

கற்றாழை ஜெல்லை முடியில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

Aleo vera gel hair

  • கற்றாழை ஜெல்லில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-பி உள்ளதால் முடியை மிகுதியாக வளர செய்கிறது.
  • கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது.
  • கற்றாழை ஜெல்லில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால் முடியை அனைத்து விதமான தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

வறண்ட கூந்தலுக்கு தயிர் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

curd hair

  • தயிர் சருமத்திற்கு மற்றும் முடிக்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
  • இதில் உள்ள புரதம், துத்தநாகம், கால்சியம் போன்ற பொருட்கள் உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை ஊட்டமளிக்கிறது.
  • இது தவிர பொடுகளை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலர்ந்த முடிக்கு வீட்டு வைத்தியம்

  • முடியின் வறட்சியைக் குறைக்க முதலில் ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 ஸ்பூன் தயிரைப் போடவும்.
  • கற்றாழை ஜெல்லை அதில் போடவும்.
  • இப்போது அதில் 1 முதல் 2 டீஸ்பூன் தேன் போட்டு மூன்றையும் நன்றாக கலக்கவும்.
  • பிரஷ் உதவியுடன் உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை தடவவும்.
  • இப்போது அதை தலைமுடியில் சுமார் 30 நிமிடங்கள் விடவும்.
  • இதற்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும்.
  • இதற்குப் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி முடியில் பூசப்பட்ட ஹேர் மாஸ்க் அகற்றப்படும்.
  • முடியை உலர்த்திய பிறகு சீரம் பயன்படுத்தலாம்.
  • இதை ஒரு வாரத்திற்கு சுமார் 2 முறை பயன்படுத்தலாம்.
  • அதே சமயம் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தலின் வறட்சி குறைவதுடன் கூந்தல் பளபளப்பாகவும் மாறும்.

 

 இந்த பதிவும் உதவலாம்: காலையில் வெறும் வயிற்றில் 6 வகை மூலிகை தண்ணீரை குடித்தால் நிகழும் மாற்றங்கள்!!

 

குறிப்பு - எந்தவொரு செய்முறையையும் முயற்சிக்கும் முன் நீங்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யவும்.

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com