herzindagi
image

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்; முடி உதிர்வை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடவும்

உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குறித்து இதில் காணலாம். இவை முடி உதிர்வை தடுக்க பெரிதும் உதவுகின்றன.
Editorial
Updated:- 2025-12-21, 11:51 IST

அடர்த்தியான, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடி வளர்ச்சிக்கு, வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஊட்டச்சத்துகளும் மிக முக்கியம். உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதில், சில வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முடி வளர்ச்சிக்கு உதவும் அத்தியாவசியமான 5 வைட்டமின்கள் குறித்து காணலாம்.

வைட்டமின் ஏ:

 

வைட்டமின் ஏ, உங்கள் உச்சந்தலையில் சீபம் (Sebum) எனப்படும் இயற்கையான எண்ணெய்யை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த சீபம் தான் தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடிகள் உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது. சீபத்தை இயற்கையான கண்டிஷனர் என்று சொல்லலாம். இது இல்லையென்றால், உங்கள் முடி வறண்டு போகக் கூடும். கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை மற்றும் பூசணிக்காய் போன்ற உணவுகளில் இருந்து இந்த ஊட்டச்சத்தை பெறலாம்.

Sweet potato

 

மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்

 

வைட்டமின் பி7 - பயோட்டின்:

 

நீங்கள் ஏதேனும் கூந்தல் பராமரிப்பு வலைப்பதிவையோ அல்லது காணொளியையோ பார்த்திருந்தால், பயோட்டின் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இது முடி வளர்ச்சிக்கான வைட்டமின் என்று அறியப்படுகிறது. இது உங்கள் முடியை உருவாக்கும் புரதமான கெரட்டின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான பயோட்டின் இல்லாமல், உங்கள் முடி மெல்லியதாகவும், அதிகமாக உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. முட்டை, விதைகள், முழு தானியங்கள் மற்றும் சில பயிறு வகைகளில் பயோட்டின் காணப்படுகிறது.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும் ஆளி விதைகளை பயன்படுத்தும் எளிய முறை

 

வைட்டமின் சி:

 

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டுமல்ல; ஆரோக்கியமான முடிக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், வைட்டமின் சி ஒரு அன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது முடியின் வேர்க்கால்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, குடைமிளகாய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் இருந்து வைட்டமின் சி சத்தை பெறலாம்.

Amla

 

வைட்டமின் டி:

 

வைட்டமின் டி பெரும்பாலும் "சூரிய ஒளி வைட்டமின்" என்று அழைக்கப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களை தூண்டி, அவற்றை சுறுசுறுப்பாக வைத்திருக்க முக்கிய பங்காற்றுகிறது. நீண்ட நேரம் வீட்டிற்குள்ளேயே இருப்பது, போதுமான சூரிய ஒளி படாதது போன்ற காரணங்களால் நகர்ப்புறங்களில் வசிக்கும் பலருக்கு இந்த வைட்டமின் பற்றாக்குறையாக உள்ளது. சூரிய ஒளி, வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், முட்டை, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் காளான்கள் ஆகியவை இதற்கு பலன் அளிக்கும். தினமும் காலையில் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது ஆரோக்கியமான வைட்டமின் டி அளவை பராமரிக்க உதவும்.

 

வைட்டமின் ஈ:

 

வைட்டமின் ஈ, என்பது ஆற்றல் மிகுந்த அன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முடியின் வேர்க்கால்கள் போதுமான ஊட்டச்சத்துகளை பெற்று வளர உதவுகின்றன. இதற்காக பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை மற்றும் அவகேடோ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

 

இது போன்ற வைட்டமின் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம்முடைய கூந்தல் வளர்ச்சி மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com