mehandi designs  for ladies

ரம்ஜானில் பெண்களின் கைகளை அழகாக்கும் மெஹந்தி டிசைன்கள்!

<span style="text-align: justify;">உள்ளங்கைகளில் நிலாவும், பின்னங்கைகள் முழுவதும் ஆங்காங்கே நட்சத்திர வடிவத்தில் வரையும் போது பெண்களின் கைகளை அழகாகக் காட்டும்.</span>
Editorial
Updated:- 2024-04-09, 23:21 IST

இன்றைய பெண்கள் திருமணம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, பிறந்த நாள் விழா என எதுவாக இருந்தாலும் தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். புதிய புதிய ஆடைகள், மேக் அப், வித்தியாசமான ஹேர் ஸ்டைல்கள் எனப் பெண்கள் தங்களை அழகாக்கிக் கொள்வதற்காக பெரும் மெனக்கெடுவார்கள். இதில் குறிப்பாக மருதாணி வைக்கும் பழக்கம் வைப்பது முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. ஆம் முன்பெல்லாம் மருதாணி இலைகளை அரைத்து வைப்பதற்கு நேரம் எடுக்கும். ஆனால் இன்றைக்குப் பெண்களுக்கான புதிய புதிய ப்ராண்டுகளில் மெஹந்திகள் விற்பனையாகிறது. 

இப்படி பெண்களுக்கு எளிமையாகக் கிடைக்கக்கூடிய மருதாணியை வைத்து இந்த ரம்ஜான் பண்டிகைக்காக என்னென்ன டிசைன்களில் அவர்கள் கைககளை அலங்கரிக்கலாம் ?என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

hennan ramzan

மேலும் படிக்க: வெயிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்!

ரம்ஜான் பண்டிகைக்கான மெஹந்தி டிசைன்கள்:

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரம்ஜான் இந்தாண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக புதிய புதிய டிசைன்களில் ஆடைகளில் வாங்கி மகிழ்வதோடு கைகளில் மெஹந்திகளைப் பெண்கள் விரும்பிப் போடுகின்றனர். 

மலர் வடிவமைப்பு:

மலர்கள் பிடிக்காத பெண்கள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. எனவே உங்களுக்கு மலர்கள் பிடிக்கும் என்றால், இதையே நீங்கள் டிசைன்களாகப் பயன்படுத்தலாம். இது கைகளை முழுமையாக மறைப்பதுடன், பராம்பரிய தோற்றத்தைக் கொடுக்கிறது. சிறிய சிறிய மலர்களால் கைகள் முழுவதும் வரையும் போது பெண்களுக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கிறது.

பிறை வடிவமைப்பு:

பிறை தெரியும் நாள் தான் ரம்ஜான் என்பதால் இதைப் பிரதிபலிக்கும் விதமாகப் பெண்கள் கைகளில் பிறை நிலாவை வரையலாம். உள்ளங்கைகளில் நிலாவும், பின்னங்கைகள் முழுவதும் ஆங்காங்கே நட்சத்திர வடிவத்தில் வரையும் போது பெண்களின் கைகளை அழகாகக் காட்டும். இதோடு மட்டுமின்றி தனித்துவமான அரபு ஹென்னா டிசைன்களையும் நீங்கள் வரையலாம். சிம்பிளாக இருப்பதோடு பெண்களுக்குத் தனித்துவமான அழகைக் கொடுக்கும்.

ramzan

சங்கிலி வடிவ டிசைன்கள்:

அரபு டிசைன்களில் சில வடிவமைப்புகளை வரைவதோடு கைகளின் பின்புற பகுதியில் சங்கிலியில் மணி தொங்குவதைப் போன்ற தோற்றத்தை வடிவமைக்கலாம். இது உங்களது கைகளில் எந்த விதமான நகைகளை அணியாமலே உங்களை மேலும் அழகாகக் காட்டுவதோடு மற்றவர்களையும் உங்கள் பக்கம் ஈர்க்கும்.

மேலும் படிக்க: ஈத் உல் ஃபிர் 2024 : இஸ்லாமியர்களின் மிகப் பெரிய பண்டிகையான ரம்ஜான் பற்றிய முக்கியத்துவம்  

உங்களுக்கு இந்த டிசைன்கள் எதுவும் பிடிக்கவில்லையென்றால், வழக்கம் போல மருதாணி இலைகளை அரைத்து வைக்கும் டிசைன்களையும் நீங்கள் ட்ரை பண்ணலாம். இது போன்ற டிசைன்கள் பெண்களை மேலும் கூடுதல் அழகாக்கும் என்பதால் இந்த ரம்ஜான் பண்டிகையில் நீங்கள் கொஞ்சம் ட்ரைப் பண்ணிப்பாருங்கள்.

Image source - Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com