முடி வளர்ச்சி என்று வரும்போதெல்லாம் சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான முடி தயாரிப்புகளை நாம் அனைவரும் நாடி செல்கிறோம். இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல முடி சார்ந்த கிரீம்கள் விற்கப்படுகின்றன. அவை அனைத்தும் குறுகிய காலத்தில் நீண்ட மற்றும் அழகான முடியைப் பெற உதவுகிறது. அதே போன்று இந்த தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. அதுமட்டுமின்றி அவற்றைப் பயன்படுத்த நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் பாக்கெட்டுக்கு ஏற்ற மற்றும் இயற்கையான முறையில் நீண்ட காலத்திற்கு முடி பராமரிக்க விரும்பினால் வெந்தயம் மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டு பொருட்களும் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தினால் குறுகிய காலத்தில் முடிக்கு நல்ல பலனைத் தரும். எனவே இன்று இந்த கட்டுரையில் வெந்தய விதைகள் மற்றும் வெங்காயத்தை தலைமுடியில் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
மேலும் படிக்க: முகம் வசீகரமாகவும், ஈரப்பதத்துடன் இருக்க இந்த சூப்பரான ஃபேஸ் மாஸ்கை ட்ரை பண்ணுங்க
முடி வளர்ச்சிக்கு, வெந்தயம் மற்றும் வெங்காயத்தின் உதவியுடன் ஹேர் மாஸ்க் தயார் செய்யலாம். இதற்கு வெந்தயத்தை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை அரைத்து பேஸ்ட் செய்யவும். வெங்காயத்தை அரைத்து அதன் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது வெங்காய சாறுடன் வெந்தய விழுதை கலக்கவும். தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் அப்படியே விடவும். இறுதியாக லேசான ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும்.
முடியை பராமரிப்பதற்கு இந்த டிப்ஸ் எளிதான வழி. இதற்கு வெந்தயத்தை தண்ணீரில் பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது கலவையை வடிகட்டி ஆற விடவும். இந்த வெந்தயத் தண்ணீரில் வெங்காயச் சாற்றைக் கலக்க வேண்டும். இப்போது தலைமுடியை ஷாம்பு போட்ட பிறகு இந்த நீரில் முடியை அலசவும். சிறிது நேரம் இப்படியே விடுங்கள். இறுதியாக முடியை வெற்று நீரில் அலசி கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: பிரகாசமான அழகை பெற வீட்டில் இந்த பாட்டி வைத்தியத்தை செய்யுங்கள்
முடி பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு வெந்தயம் மற்றும் வெங்காயத்தின் உதவியுடன் முடி எண்ணெய் தயாரிக்கலாம். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வெந்தயத்தை கலக்கவும். வெந்தய விதைகள் பழுப்பு நிறமாக மாறும் வரை எண்ணெயை சூடாக்க வேண்டும். இப்போது எண்ணெயை ஆறவைத்து பின் வடிகட்ட வேண்டும். இப்போது அதில் வெங்காய சாறு சேர்க்கவும். தயாரிக்கப்பட்ட எண்ணெயை சுத்தமான கண்ணாடி பட்டிலில் வைக்கவும். உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்ய இதைப் பயன்படுத்தவும். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து நீங்கள் ஷாம்பு தலைக்கு போடலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com