பெண்கள் பலரும் விஷேஷ காலத்தில் அல்லது ஏதேனும் கல்யாண நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மேக்கப் செய்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்படி அவர்கள் செய்யும் மேக்கப் சிறந்த முறையில் அமைந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே மேக்கப் சரியாக அமையவில்லை என்றால் அவர்களது மனநிலை பாதிக்கப்படும். இதற்கு முதலில் அவர்கள் சருமம் அழகாக இருக்க வேண்டும். சில பெண்களின் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும் பொழுது அவர்களுக்கு மேக்கப் சிறப்பாக அமைந்து விடும். மேக்கப் அணியாமலேயே நம் முகத்தை பொலிவு படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக ஒரு பெண் தனது சருமத்தை நீரேற்றமாகவும் பளபளப்பாகவும் வைக்க விரும்பினால் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது ஜில் தண்ணீர் கொண்டு முகம் கழுவலாம்.
மேலும் படிக்க:பளபளப்பாக முகம் ஜொலிக்கனுமா? மாதுளை மாஸ்க் ட்ரை பண்ணுங்க
முகத்தை வீட்டில் இருந்தபடி பொலிவாக்க வாரத்திற்கு இரண்டு முறை லேசான ஸ்க்ரப் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். நாம் இப்படி முகத்தில் ஸ்கிரப் செய்து இறந்த செல்களை நீக்கும் பொழுது முகம் பொலிவு பெற ஆரம்பிக்கிறது. மேலும் முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் ஸ்க்ரப் செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது.
நம் முகத்தை ஸ்கிரப் செய்து இறந்த செல்களை நீக்கிய பிறகு நம் சருமத்திற்கு ஏற்ப சரியான கிளன்சரை பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக ஒருவேளை நீங்கள் மேக்கப் அணிந்திருந்தால் அந்த மேக்கப்பை மைகேலர் தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும். இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் கொண்டும் முகத்தில் உள்ள மேக்கப்பை எளிதில் சுத்தம் செய்யலாம்.
நமது சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்க முதலில் உணவில் சர்க்கரை மற்றும் உப்பை குறைக்க வேண்டும். அதேபோல நம் சருமம் பொலிவோடு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் அவகேடோ பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பளபளப்பான சருமத்திற்கு தினமும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்த்து சாப்பிடுவது அவசியம். நம் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டில் இருந்தபடி ஏதேனும் பேக் அல்லது ஷீட் மாஸ்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். முகம் பொலிவு பெற போதுமான அளவு தூக்கம் மிக முக்கியம். குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் தூங்கினால் போதும், உங்கள் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் மாறிவிடும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் கொண்டு முகத்தை துடைக்கவும். இது உங்கள் சருமத்தின் அழுக்கை நீக்கி ஈரப்பதத்தை கொடுக்க உதவும். கற்றாழை எடுத்து அரைத்து அதன் பேஸ்டை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முகத்தில் தடவி வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாகும்.
அதேபோல பச்சை உருளைக்கிழங்கை அரைத்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை முகத்தில் தடவி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து உங்கள் விரல்கள் கொண்டு மசாஜ் செய்யவும். இதன் பிறகு ஜில் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும். இது உங்கள் முகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஈரப்பதத்துடன் பொலிவு பெற உதவும். மஞ்சளுடன் சிறிது தேன் கலந்து முகப் பருக்கள் உள்ள பகுதியில் தடவி வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் குணமாகும். ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் உளுத்தம் பருப்பு அல்லது அரிசி மாவு கலந்து பேஸ்ட் போல செய்து 15 நாட்களுக்கு ஒரு முறை இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி வரலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்கவும் முகத்தில் முகப்பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com