herzindagi
image

3 நாட்களில் கழுத்தில் கருமை நீங்க டூத் பேஸ்ட் போதும்; இப்படி யூஸ் பண்ணுங்க

முகத்திற்கு என்னதான் மேக்கப் போட்டு அலங்காரம் செய்தாலும், கழுத்தில் கருமை இருந்தால் உங்கள் முகம் பிரகாசமாக தெரியாது. இது உங்களுக்கு தர்ம சங்கடமான நிலையை உண்டாக்கும்.
Editorial
Updated:- 2025-07-04, 13:26 IST

சில பெண்களுக்கு முகம் அழகாக நிறமாக இருந்தாலும் கழுத்தில் உள்ள கருமை அவர்களது அழகையே சீர்குலைத்து விடும். பெண்கள் பலருக்கும் இந்த கழுத்தில் கருமை படரும் பிரச்சனை உள்ளது. நீங்கள் முகத்திற்கு என்னதான் மேக்கப் போட்டு அலங்காரம் செய்தாலும், கழுத்தில் கருமை இருந்தால் உங்கள் முகம் பிரகாசமாக தெரியாது. இது உங்களுக்கு தர்ம சங்கடமான நிலையை உண்டாக்கும். கழுத்தில் உள்ள கருமையை வெறும் சோப்பு பயன்படுத்தி போக்குவது கடினம். அந்த வரிசையில் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்க உதவும் சில இயற்கை வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

கழுத்தில் கருமை ஏற்படும் காரணங்கள் என்ன?


நாம் குளிக்கும் போது கழுத்துப் பகுதியில் நன்றாக தேய்த்து குளிக்காமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றம், வெயிலில் அதிகம் செல்வது, சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பு, தோல் அலர்ஜி, தோல் தடியாவது போன்றவை இந்த கழுத்து பகுதி கருமை ஏற்பட காரணங்கள். அதேபோல ஒரு சில பெண்களுக்கு நகைகள் அணிந்தால் கழுத்து பகுதியில் கருமை ஏற்படும். இதை குணப்படுத்த உதவும் எளிய 3 வீட்டு வைத்தியங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

dark neck

வைத்தியம் 1:


முதலில் ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு உப்பு கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு துண்டை எடுத்து இந்த வெந்நீரில் நனைத்து லேசாக புழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே உங்கள் கழுத்தில் கருமை நிறம் உள்ள பகுதியில் வைத்தால் கருமை நீங்கும். இதை ஒரு பத்து நிமிடம் கழுத்தில் அப்படியே வைக்க வேண்டும். இது உங்கள் கழுத்து பகுதியில் உள்ள அழுக்குகளை நீக்கி கழுத்து கருமையை போக்க உதவி செய்யும்.

வைத்தியம் 2: 

ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பல் துலக்கும் பேஸ்ட் சிறிதளவு சேர்க்க வேண்டும். அடுத்ததாக கற்றாழை ஜெல்லையும் இதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து எடுத்த பிறகு இதை அப்படியே உங்கள் கழுத்தில் கருமை நிறம் படர்ந்த பகுதிகளில் தடவி ஒரு நிமிடம் லேசாக மசாஜ் செய்யுங்கள். இதற்குப் பிறகு ஒரு பத்து நிமிடம் அல்லது 15 நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். இதனை அடுத்து தண்ணீரால் உங்கள் கழுத்து பகுதிகளை கழுவி விடுங்கள். இதுபோல செய்து வந்தால் கழுத்து பகுதியில் உள்ள கருமை நீங்கும்.

paste

வைத்தியம் 3:


இதற்கு தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு, அரிசி மாவு மற்றும் தேன். முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி சாற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும். இப்போது அரிசி மாவு 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நாம் எடுத்து வைத்த உருளை சாற்றை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு கலந்து கொள்ளுங்கள். இதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்டை கழுத்தில் உள்ள கருமை பகுதிகளில் தடவி லேசாக மசாஜ் செய்து பத்து நிமிடம் அப்படியே விடுங்கள். பிறகு தண்ணீரால் கழுத்துப்பகுதியை கழுவி கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: டல் அடிக்கும் சருமம் தங்கம் போல ஜொலிக்க; இந்த பூக்களை இரவில் பயன்படுத்தி பாருங்க

இந்த மூன்று வீட்டு வைத்தியங்களையும் ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வரலாம். இதை வாரம் மூன்று நாட்கள் பயன்படுத்தினால் உங்கள் கழுத்தில் உள்ள கருமை நிறம் நிரந்தரமாக மறைந்துவிடும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com