herzindagi
image

டல் அடிக்கும் சருமம் தங்கம் போல ஜொலிக்க; இந்த பூக்களை இரவில் பயன்படுத்தி பாருங்க

பூக்கள் உங்கள் சருமத்திற்கு உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? பூக்கள் மற்றும் தாவரங்கள் பல நூற்றாண்டுகளாக அழகுச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Editorial
Updated:- 2025-07-01, 15:12 IST

பல பெண்களுக்கும் ஜொலிக்கும் சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். பார்லருக்கு சென்று பேஷியல் செய்வது அல்லது கெமிக்கல் ரசாயனங்கள் பயன்படுத்துவது பிரகாசமான சருமத்தை தரும் என்றாலும் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. அது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு இதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். பூக்கள் உங்கள் சருமத்திற்கு உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? பூக்கள் மற்றும் தாவரங்கள் பல நூற்றாண்டுகளாக அழகுச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பிரகாசமான தோலுக்கு உதவும் சில பூக்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் இயற்கை முறைகள் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  

ரோஜா பூ:


ரோஜாப்பூவில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி தோலின் ஒளியை அதிகரிக்க உதவுகின்றன. இது தோலின் சுருக்கங்களை குறைக்கவும், ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது.


பயன்படுத்தும் முறை:

 

  • ரோஜா இதழ்களை சிறிது தண்ணீரில் ஊறவைத்து, பிறகு அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு ஊற விட்டு கழுவவும்.
  • ரோஜா தண்ணீரை டோனராகப் பயன்படுத்தி தோலின் பிரகாசத்தை அதிகரிக்கலாம்.

rose

மல்லிப் பூ:


மல்லிப்பூவில் உள்ள இயற்கை எண்ணெய்கள் தோலின் நிறத்தை சமநிலைப்படுத்துகின்றன. இது தோல் பிரச்சினைகளான முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.


பயன்படுத்தும் முறை:

 

  • மல்லிப்பூ இதழ்களை அரைத்து தேனுடன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் விட்டுவிட்டு கழுவவும்.
  • மல்லிப்பூ எண்ணெயை இரவில் தூங்கும் முன் முகத்தில் பூசி காலையில் கழுவலாம்.


செம்பருத்தி:


செம்பருத்திப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி தோலின் மீளுருவாக்கத்திற்கு உதவுகின்றன. இது முடி மற்றும் தோல் ஆகிய இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.


பயன்படுத்தும் முறை:

 

  • செம்பருத்திப்பூ இதழ்கள் மற்றும் கோகோ எண்ணெயை கலந்து பேஸ்ட் தயாரித்து முகத்தில் பூசி 20 நிமிடம் விட்டுவிட்டு கழுவவும்.
  • செம்பருத்திப்பூவை அரைத்து தோல் மிருதுவாக்கும் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.

முல்லைப்பூ:


முல்லைப்பூவில் உள்ள ரீஜெனரேடிவ் பண்புகள் தோலின் செல்களை புதுப்பிக்க உதவுகின்றன. இது வயதான தோல் அறிகுறிகளைக் குறைக்கிறது.


பயன்படுத்தும் முறை:

 

  • முல்லை இதழ்களை பசும்பாலுடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் விட்டுவிட்டு கழுவவும்.
  • முல்லை எண்ணெயை இரவு பயன்பாட்டிற்கு ஃபேஸ் ஆயில் ஆக பயன்படுத்தலாம்.

mullai poo

துளசிப் பூ:


துளசிப் பூவில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஇன்ஃப்ளேமேட்டரி பண்புகள் உள்ளன. இது பருக்கள் மற்றும் பக்டீரியா தொற்றுகளை தடுக்கிறது.


பயன்படுத்தும் முறை:

 

  • துளசி இதழ்களை அரைத்து, சந்தனத்துடன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் விட்டுவிட்டு கழுவ வேண்டும்.
  • துளசி தண்ணீரை டோனராகப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: வழுக்கை விழ ஆரம்பிக்கும்போதே இதை செய்தால் முடியை காப்பாத்தலாம்; இந்த 2 பொருட்கள் போதும்

இயற்கையான பூக்கள் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்துவது தோலுக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பிரகாசத்தைத் தரும். வாரம் ஒரு முறை இந்த இயற்கை முறைகளை பின்பற்றினால், தோல் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். உங்கள் தோலின் வகைக்கு ஏற்றவாறு பொருத்தமான பூக்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com