இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மத்தியில் மேக்கப் பொருட்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடுவதை அதிகப்படியான பெண்கள் விரும்புகின்றனர். கடைகளிலும் தற்போது எண்ணற்ற லிப்ஸ்டிக் வகைகளை பார்க்க முடிகிறது. அதிலும் நீண்ட நேரம் தாங்க கூடிய ’லாங் லாஸ்டிங்’ லிப்ஸ்டிக்குகள் பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த வகையான லிப்ஸ்டிக் உதடுகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது பலரும் அறிந்திடாத உண்மை.
நீண்ட நேரம் உதடுகளில் தங்கி இருக்கும் லாங் லாஸ்டிங் லிப்ஸ்டிக்குகள் உதடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் சொல்ல போகிறோம். இத்தனை நாட்களாக இந்த உண்மை தெரியாமல் இந்த வகை லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தி வந்தவர்கள் கட்டாயம் இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.
கருமையான உதடுகள்
லிப்ஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்கள் உதடுகளை பொலிவிழந்து கருப்பாக மாற்றுகிறது. அதே போல் இது நிறமி பிரச்சனையும் ஏற்படுத்துகிறது. இதுதவிர இந்த வகையான லிப்ஸ்டிக் உதடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கருமையாக்குகிறது .
இந்த பதிவும் உதவலாம்: ஆன்லைனில் லிப்ஸ்டிக் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!
புற்றுநோய் பாதிப்பு
ரசாயனங்கள் நிறைந்த லிப்ஸ்டிக்கை தினமும் பயன்படுத்தினால் தோல் புற்றுநோய் வரவும் வாய்ப்புண்டு. ஏனெனில் ,இந்த வகையான ரசாயனங்கள் உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து உதடுகளுக்கு வறட்சியை தருகிறது. இதில் இருக்கும் ஃபார்மால்டிஹைட் மற்றும் பாரபென் ரசாயனங்கள் தோல் மற்றும் கண்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
உதட்டில் இருக்கும் துளைகளுக்கு நல்லதல்ல
லிப்ஸ்டிக்கில் இருக்கும் மினரல் ஆயில் உதடுகளில் இருக்கும் துளைகளை மூட செய்கிறது. இதன் காரணமாக உதடுகளின் தோல் சுவாசிக்க முடியாமல் தவிக்கும். எனவே முடிந்தவரை லிப்ஸ்டிக்கைக் குறைவாக பயன்படுத்துவது நல்லது.
வறட்சியான உதடுகள்
குறிப்பாக நீண்ட நேரம் தாங்கும் லிக்யூட் லிப்ஸ்டிக் வகையானது உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது, இதன் காரணமாக உங்கள் உதடுகள் வறண்டு போகும். எனவே, உங்கள் உதடுகளை முறையாக கவனித்து கொள்வது உங்களின் கடமை. முடிந்தவரை நீண்ட நேரம் தாங்கும் லிப்ஸ்டிக் வகையை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.
உதடுகளை பராமரிக்கும் முறைகள்
- உதடுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்தவும்.
- உதட்டுகளை முறையாகப் பராமரிக்க லிப் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.
- லிப்ஸ்டிக் போடும் முன் லிப் பாம் பயன்படுத்துவதும் நல்லது.
- இது தவிர, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 5 முறை உதடுகளுக்கு லிப் பாம் பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம்: கண்களில் மேக்கப் போடும்போது செய்யும் தவறுகள் குறித்து தெரியுமா உங்களுக்கு?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்..