முகத்தை பளபளக்க வைக்கும் கருஞ்சீரகம்!!!

பளபளக்கும் சருமத்தை பெற வேண்டுமா? நம் சமையலறையில் இருக்கும் கருஞ்சீரகம் போதும்.

kalonji for skin brightening

அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை கருஞ்சீரகத்தில் உள்ளது. மேலும், வைட்டமின்கள் A, B, C மற்றும் B12 இதில் உள்ளது. எனவே, கருஞ்சீரகத்தின் உதவியுடன், உங்கள் சருமத்தை பிரகாசமாக மாற்றலாம். சருமத்தில் கருஞ்சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

கருஞ்சீரகம், கடலை மாவு மற்றும் தேன் கலந்து ஃபேஸ் மாஸ்க் செய்தல்

உங்கள் சருமம் வறண்டிருந்தால், கருஞ்சீரகம், கடலை மாவு மற்றும் தேன் ஆகியவற்றின் உதவியுடன் ஒரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கருஞ்சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
  • தேன் - அரை டீஸ்பூன்
  • கிரீம் - 1 ஸ்பூன்
  • கடலை மாவு - 1 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்

ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை

  • ஃபேஸ் மாஸ்க் செய்ய, கருஞ்சீரகத்தை அரைத்து தூள் செய்து கொள்ளவும்.
  • அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது அதை நன்றாக பேஸ்ட் போல செய்து உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு அதை தடவவும்.
  • சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவவும்.
  • இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

கருஞ்சீரகம் மற்றும் காபி தூள் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்தல்

girl put face mask

எண்ணெய் பசை சருமத்திற்கு இந்த ஃபேஸ் மாஸ்க் மிகவும் சிறந்ததாகும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மேலும் பிரகாசமாக மாற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: நரை முடியா? காபியில் செய்த இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!

தேவையான பொருட்கள்

  • கருஞ்சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
  • உலர் காபி தூள் - 1 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 1/2 டீஸ்பூன்
  • அரை எலுமிச்சை பழத்தின் சாறு

ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை

  • இந்த ஃபேஸ் மாஸ்க் செய்ய முதலில் கருஞ்சீரகத்தை அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  • இப்போது அதில் இலவங்கப்பட்டை மற்றும் காபி தூள் சேர்க்கவும்.
  • இந்த கலவையில் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  • இந்த கலவை தயாரானதும், உங்கள் முகத்தை சுத்தம் செய்து, இந்த பேஸ்டை தடவவும்.
  • உங்கள் கைகளை பயன்படுத்தி மிகவும் லேசாக, விரல் நுனியின் உதவியுடன் முகத்தில் மசாஜ் செய்யவும்.
  • இந்த பேஸ்ட் காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
  • இறுதியாக உங்கள் முகத்தை மாய்ஸ்சுரைஸ் செய்யுங்கள்.

குறிப்பு- உங்கள் சருமம் உணர்திறன் கொண்டதாக இருந்தால், இந்த கலவையில் எலுமிச்சை சாறு சேர்ப்பதை தவிர்க்கவும்.

கருஞ்சீரகம் மற்றும் எசென்ஷியல் எண்ணெய் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்யவும்

girl with face pack

இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தை மேலும் பிரகாசமாக்குவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • கருஞ்சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை தோல் பொடி - 1 டீஸ்பூன்
  • ஆப்பிள் சைடர் வினிகர் - அரை டீஸ்பூன்
  • தயிர் - ஒரு ஸ்பூன்
  • தேயிலை மர எண்ணெய் - 4 - 5 சொட்டு

இந்த பதிவும் உதவலாம்: முகத்திற்கு பல நன்மைகளை அள்ளி தரும் வாழைப்பழம்!!

ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை

  • இந்த மாஸ்க் செய்ய கருஞ்சீரகத்தை அரைத்து தூள் செய்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகம் தூள், எலுமிச்சை தோல் பொடி, ஆப்பிள் சைடர் வினிகர், தயிர் மற்றும் தேயிலை மர எண்ணெய் சேர்த்து மென்மையான பேஸ்ட்டை தயாரிக்கவும்.
  • இப்போது உங்கள் முகத்தை கழுவிவிட்டு, சருமத்தில் இந்த பேஸ்ட்டை தடவவும்.
  • சுமார் 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
  • இறுதியாக, சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்யுங்கள்.

இனி நீங்கள் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி உங்கள் முகத்தை பிரகாசமாக மாற்றலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP