வெயில்காலங்களை விட குளிர்காலத்தில் பெண்கள் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆம் குளிர்ந்த காற்று சருமத்தில் ஈரப்பதத்தை இழக்க செய்வதோடு, முகத்தில் கருந்திட்டுகள், தோல் உரிதல் போன்ற சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் குளிந்த காற்றால் சூடான தண்ணீரைக் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தும் போது சருமத்தில் மேலும் பல சிக்கல்களை நமக்கு ஏற்படுத்தும். இதைத் தடுப்பதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதோடு அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதோடு மட்டுமின்றி சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்புடன் வைத்திருக்க இந்த பானங்களைக் கட்டாயம் பருக வேண்டும்.
மேலும் படிக்க: வீட்டிலேயே ஹைட்ரா ஃபேஷியல் செய்யுங்கள் - 40 வயதிலும் 20 போல இருப்பீங்க
சருமத்தைப் பொலிவாக வைத்திருப்பதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேன் கலந்து குடிக்கவும். இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி.ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை நீக்கி சருமத்தைப் பொலிவாக்குகிறது. குறிப்பாக.வைட்டமின் சி பண்புகள் குளிர்காலத்திலும் சருமத்தைப் பாரமரிக்க உதவுகிறது.
பாலுடன் மஞ்சள் கலந்து தினமும் பருகும் போது , இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு உள்ளிருந்து ஆற்றல் அளிக்கிறது. மஞ்சள் கலந்த பாலைப் பருகுவது தோலில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: இரவில் தூங்கும் முன் இதை மட்டும் செய்யுங்க - காலையில் குளித்த பின் உங்க முகம் ஜொலிக்கும்
சரும பராமரிப்பு என்று வரும் போது கற்றாழைக்கு பெரும் மவுசு உள்ளது. எந்தவொரு அழுகு சாதனப் பொருட்களை எடுத்துக் கொண்டாலும் கொஞ்சமாவது கற்றாழை இடம் பெற்றிருக்கும். குளிர்காலத்தில் கற்றாழை சாறாக எடுத்து பருகும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இதோடு முகத்தை எப்போதும் மென்மையாகவும் , பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது. அனைத்து நேரங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சருமத்தை அனைத்து பருவ காலங்களிலும் பொலிவுடன் வைத்திருப்பதற்கு பீட்ரூட் சிறந்த தேர்வாக அமையும். இதில் உள்ள இரும்புசத்து மற்றும் தாதுக்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.
குளிர்காலத்தில் சருமத்திற்குத் தேவையான வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் வழங்க வேண்டும் என்று நினைத்தால் இஞ்சி மற்றும் தேன் கலந்த டீயை அருந்தலாம்.
மேலும் படிக்க: கடலை மாவு, தயிர் இரண்டையும் 11 வழிகளில் இப்படி யூஸ் பண்ணுங்க- முகப்பொலிவிற்கு 100% கேரண்டி
குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சியைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீர் அருந்தலாம். இதில் உள்ள எலக்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கி உள்ளிழுந்து நீரேற்றமாக வைத்திருக்கும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com