திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைக்காமல் அவர்களின் மேக்கப் லுக் முழுமையடையாது. திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது இந்து மரபில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் பல காரணங்களால் நெற்றி வகிடில் வைக்கப்படும் குங்குமம் சில நேரங்களில் முகம், கண், மூக்கு போன்ற பகுதிகளிலும் பரவி விடுகிறது. இது எல்லா பெண்களும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை.
இதனால் தோற்றம் கெடுவது மட்டுமல்லாமல் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கப்படுகிறது. இதுப்போன்ற நேரங்களில் குங்குமம் பூசும்போது கவனமாய் இருந்தால் நீங்கள் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம். பெண்கள் வகிடில் குங்குமம் வைக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
அதிகப்படியான குங்குமம்
அளவுக்கு அதிகமான குங்குமத்தை கையில் எடுத்து அதை நெற்றி வகிடில் வைத்தால் அது தானாகவே கொட்ட ஆரம்பிக்கும். மேலிருந்து குங்குமம் கீழே கொட்டுவதால் அது சில சமயங்களில் நெற்றி, மூக்கு, கண், போன்ற பகுதியில் பட்டு அந்த இடமும் சிவப்பாக மாறி விடும். எனவே குறைவான அளவு குங்குமத்தை எடுத்து வகிடில் படிய விடவும்.
இந்த பதிவும் உதவலாம்:கண்களில் மேக்கப் போடும்போது செய்யும் தவறுகள் குறித்து தெரியுமா உங்களுக்கு?
தவறான முறை
நீங்கள் குங்குமத்தை நெற்றி வகிடில் சரியான இடத்தில் வைக்கவில்லை என்றாலும் அது கீழே கொட்ட தொடங்கும். அதே போல் தவறான இடத்தில் அதிகளவு குங்குமத்தை எடுத்து படிய வைத்தாலும் அது எல்லா இடங்களிலும் படர்ந்து விடும். எனவே பாதியளவு குங்குமத்தை மட்டுமே எடுத்து அதை சரியாக நெற்றி மற்றும் வகுடுக்கு நடுவில் வைத்து படிய விடவும்.
நெற்றியில் குங்குமம்
வகிடில் குங்குமத்தை வைப்பதை காட்டிலும் நெற்றியில் குங்குமத்தை வைப்பது தான் இப்போதைய ட்ரெண்டிங். நீங்கள் நெற்றியில் ஈரப்பதம் கலந்த குங்குமத்தை வைத்தால் அது சரியாக ஒட்டாது. அதுவே பவுடர் குங்குமத்தை நெற்றியில் வைத்து அதை வகுடு வரை படிய வைப்பது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும் உங்கள் தோற்றமும் கூடுதல் அழகாக தெரியும்.
கலர் கலந்த குங்குமம்
பலரும் நல்ல சிவப்பான நிற குங்குமத்தை வைத்து கொள்ள விரும்பி கடைகளில் விற்கப்படும் கலர் பொடி கலந்த கலப்பட குங்குமத்தை தெரியாமல் வாங்கி விடுகின்றனர். இந்த வகையான குங்குமம் தோல் மற்றும் முடிக்கும் கெடுதலை விளைவிக்கும். கலர் அதிகம் கலந்த குங்குமம் கழுவிய பின்பும் வகிடில் இருந்து அவ்வளவு சீக்கிரம் போகாமல் எப்போதுமே சிவப்பு நிறத்தில் இருந்து உங்கள் தோற்றத்தை கெடுக்கும்.
செய்ய கூடாத தவறுகள்
நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு முன்பே தலையை சீப்பால் வாரி விட வேண்டும். குங்குமம் வைத்த பிறகு தலை வாரினால் அது எல்லா இடத்திலும் பரவும். அதே போல் முன்புறம் பஃப் வைத்த ஹேர்ஸ்டைல் வாரினால் நீங்கள் ஈரப்பதம் கலந்த குங்குமத்தை பயன்படுத்துவதே சிறந்தது. பவுடர் குங்குமம் பஃபில் ஒட்டி எல்லா இடத்திலும் பரவி விட்டால் மீண்டும் அதை வெளியெ எடுத்து ஹேர் ஸ்டைலை வார வேண்டியது வரும். எனவே இதுப்போன்ற சமயங்களில் ஈரப்பதம் கலந்த குங்குமத்தை பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம்:ஹேர் எக்ஸ்டென்ஷன் குறித்து அறிய வேண்டிய தகவல்கள் இதோ!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation