herzindagi
image

கையளவு பூண்டு ஹேர் மாஸ்க் இருந்தால் பொடுகுக்கு குட் பாய் சொல்லலாம்

பூண்டு நமது தலைமுடிக்கு நல்ல பலனை தரக்கூடியது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. சரியான பூண்டு ஹேர் மாஸ்க் உச்சந்தலை பாதுகாப்பு, முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் முடி பிளவுகளை தடுக்கிறது.
Editorial
Updated:- 2024-12-10, 23:48 IST

முடி பராமரிப்பு என்பது ஒரு பெரிய வேலையாக பார்க்கும் நிலை வந்துவிட்டது. இதற்கு காரணம் அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையால் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது. இதற்கு சந்தையில் இருந்து வாங்கப்படும் கெமிக்கலால் செய்யப்பட்ட ஷாம்பூக்கள் மற்றும் முடி தயாரிப்புகள் பெருமாளும் வேலை செய்யாது.

இயற்கையான வழியைத் தேடும் ஒருவராக நீங்கள் இருந்தால், தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் பூண்டைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. பூண்டு தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யக்கூடிய ஒரு மூலப்பொருளாகும். மேலும் நீங்கள் எப்போதும் விரும்பும் பளபளப்பான முடியை அடைய உதவுகிறது. பூண்டில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும், முடி வேர்களை வலுப்படுத்தும் மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டும். இது தவிர, பூண்டில் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளதால் செதில்கள் அல்லது உலர்ந்த உச்சந்தலையில் இருந்து விடுபட உதவும். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

 

மேலும் படிக்க:  கண்களுக்கு கீழே கிரீம் பயன்படுத்தும்போது மறந்துகூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்

 

முக்கிய குறிப்பு: பூண்டு ஒரு வலுவான, கடுமையான வாசனையைக் கொண்டுள்ளதால் வாசனையிலிருந்து விடுபட நீங்கள் வலுவான இயற்கை ஷாம்பு அல்லது கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.

 

பூண்டு & தேன் பயன்படுத்தலாம்

 

பூண்டில் செலினியம் நிரம்பியுள்ளதால் முடிகள் உடைவது, முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேன், மறுபுறம், உச்சந்தலையில் ஈரப்பதத்தை பூட்டுவதன் மூலம் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. 12 பூண்டு பல்களை எடுத்து, அவற்றை நசுக்கி, 2 டீஸ்பூன் தேனுடன் கலக்கவும். அதை உங்கள் உச்சந்தலையில் தடவி 20-30 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு கழுவவும்.

garlic hair care

 Image Credit: Freepik


பூண்டு & வெங்காயம்

 

பூண்டு மற்றும் வெங்காயம் உங்கள் முடி பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு பழமையான தீர்வாகும். இந்த ஹேர் மாஸ்க்கைத் தயாரிக்க 2 வெங்காயம், 2-3 பூண்டு பற்கள் ஆகியவற்றை அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாற்றை உச்சந்தலையில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும், பின்னர் சுமார் 15-20 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வலுவான இயற்கை ஷாம்பூவுடன் அதை கழுவவும்.

garlic 2

Image Credit: Freepik

பூண்டு & தேங்காய் எண்ணெய்

 

தேங்காய் எண்ணெயில் பல வைட்டமின்கள் உள்ளதால் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்க உதவுகின்றன. முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைக் குறைக்கின்றன. பூண்டு, பொடுகைக் குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது அதிக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் உச்சந்தலையைத் தூண்டி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 5-6 பூண்டு பற்களை எடுத்து அவற்றை நசுக்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை சில நிமிடங்களுக்கு சூடாக்கி, பின்னர் உங்கள் உச்சந்தலையில் சுமார் அரை மணி நேரம் மசாஜ் செய்யவும். அதன்பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் தலைமுடியைக் கழுவவும்.

 

மேலும் படிக்க: உடைந்து சேதமடையும்  முடிக்கு தண்ணீரில் அலசுவதில் இருக்கு சிறந்த தீர்வு

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com