herzindagi
image

கண்களுக்கு கீழே கிரீம் பயன்படுத்தும்போது மறந்துகூட இந்த தவறுகளை செய்யாதீர்கள் 

கண்களுக்குக் கீழே கிரீம் தடவும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயஙள் உள்ளது, இல்லையென்றால் பல கண் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த 5 தவறுகள் என்ன என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-12-06, 17:20 IST

பெண்களின் அழகு பராமரிப்பு வழக்கத்திலும் கண் கிரீம்கள் பயன்படுத்துவது முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. கண்களுக்குக் கீழே  கருவளையம், வீக்கம் மற்றும் பல கண் சாந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு மீட்பராக செயல்படுகிறது. கண்களுக்கு கீழ் இந்த கிரீம்களை பயன்படுத்துபவர்களுக்குச் சரியான முறை தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இதுவே கண் பிரசைகளைக் கொண்டு வந்துவிடும். கண் கிரீம் தயாரிப்பைப் பயன்படுத்தும்போது பெரும்பாலான மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள், அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை பார்க்கலாம். 

கண் கிரீம் அதிகமாக பயன்படுத்த வேண்டாம்

 

கண் கீழ் பகுதி மிகவும் சிறிய இடமாகும், எனவே உங்களுக்கு அதிக தயாரிப்பு கிரீம் தேவையில்லை. பெரும்பாலான தாவர அடிப்படையிலான கண் கிரீம்கள் மற்ற தோல் பராமரிப்பு தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது அதிக விலையில் இருக்கின்றது. அதாவது நீங்கள் அவற்றை வீணாக்க விரும்பவில்லை என்றால் மிகவும் சிறிய அளவில் எடுத்து பயன்படுத்தலாம். இதுவே உங்கள் கண் கிரீம் நீண்ட நேரம் நீடிக்கு செய்யும்.

eye

 Image Credit: Freepik


தவறான வழியில் கண் கிரீம்கள் தடவுவது

 

தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான முறைகள் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவை சருமத்தில் உறிஞ்சப்படுவதையும் ஒட்டுமொத்த விளைவுகளையும் பாதிக்கிறது. மற்ற தோல் பராமரிப்புப் பொருட்களுடன் கிரீம் பயன்படுத்துவதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் தயாரிப்பு பேக்கேஜிங்கில் உள்ள வழிமுறைகளைப் பார்ப்பது சிறந்தது. கண்ணைச் சுற்றி சிறிய புள்ளிகளில் கிரீம் தடவி விரல்களால் மெதுவாகத் தடவ வேண்டும்.

 

கண்களுக்கு மிக நெருக்கமாகப் பயன்படுத்துவது

 

கண்களுக்குக் கீழே உள்ள சருமம் மிகவும் மென்மையான பகுதிகளில் ஒன்றாகும் மற்றும் மென்மையான கவனிப்பு தேவை. கண்களுக்குக் கீழே உள்ள கிரீம்கள் உங்கள் முழு கண் பகுதியிலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கண்ணுக்கு மிக நெருக்கமான தோலில் தயாரிப்பைப் பயன்படுத்துவது அதிக தீங்கு விளைவிக்கும் மற்றும் மேலும் எரிச்சல் மற்றும் இருண்ட வட்டங்களுக்கு வழிவகுக்கும்.

 

மேலும் படிக்க: முகத்தில் வேக்சிங் செய்யாமல் சுலபமான முடிகளை அகற்ற எளிய வழிகள்

வறண்ட சருமத்தில் பயன்படுத்துதல்

 

கண்களைச் சுற்றியுள்ள சருமம் வறட்சி மற்றும் சேதத்திற்கு அதிக வாய்ப்புள்ளது. சற்று ஈரமான முகத்தில் கண் கிரீம் பயன்படுத்த வேண்டும். உங்கள் தோல் சற்று ஈரமாக இருக்கும் போது அதன் ஊடுருவல் அதிகரிக்கிறது. இது கண் க்ரீமில் உள்ள பொருட்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. சற்றே ஈரமான தோலில் பயன்படுத்தும்போது தோல் பராமரிப்பு பொருட்கள் அதிகபட்ச நன்மைகளை தருகின்றன.

medium-shot-woman-holding-cream-container_23-2149887587

 Image Credit: Freepik


கிரீமை கண்டலுக்கு அடியில் கடுமையாக தேய்த்தல்

 

கண்களைச் சுற்றியுள்ள பகுதி மென்மையானது. எனவே கண்களைத் தேய்ப்பதால் மென்மையான இரத்த நாளங்கள் சிதைந்துவிடும். இது இறுதியில் இருண்ட வட்டங்கள், வீங்கிய கண்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் மோதிர விரலைப் பயன்படுத்தி கண் கிரீம் மெதுவாக தடவ செய்வது நல்லது.

 

மேலும் படிக்க: இரவு படுக்கைக்கு முன் இந்த 4 முக்கிய காரணங்களுக்காக முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com