
உடலில் துர்நாற்றம் வீச பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் பிரச்சனை தொடங்கி பழக்க வழக்கம், உணவு, ஆடை, சோப்பு, என பல முக்கிய மாற்றங்களால் உடலில் துர்நாற்றம் வீச தொடங்குகிறது. பெரும்பாலும் உடலில் அதிகப்படியான வியர்வை வழிந்து, அதன் மூலமே வியர்வை நாற்றம் உடல் முழுவதும் பரவுகிறது. இதற்கு மருத்துவ சிகிச்சை தொடங்கி பல வைத்தியங்கள் உள்ளன.
உடலில் வீசும் துர்நாற்றம் நமக்கு மட்டுமில்லை மற்றவர்களையும் பாதிக்கும் பிரச்சனையாக உள்ளது. பயணம் மேற்கொள்ளும் போது இது மிகப்பெரிய அவஸ்தையாக மாறுகிறது. எனவே, இந்த பதிவில் உடல் துர்நாற்றத்தை சரிசெய்ய, வீட்டிலேயே இயற்கையாக செய்யக்கூடிய விஷயங்கள் பற்றி பார்க்க போகிறோம். இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்கள். நிச்சயம் நல்ல ரிசலட் கிடைக்கும்.
புதினா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கவும். இது துர்நாற்றத்தை அகற்றுவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ளும்.
வேப்பிலை பாக்டீரியா தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு தருகிறது. உடல் துர்நாற்றத்தை போக்க, வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதே நீரில் குளிக்கவும்.
குளித்த பிறகு ஒரு ஸ்பூன் தேனை சிறிது தண்ணீரில் கலந்து லோஷன் போல உடல் முழுவதும் தடவி பின்பு மீண்டும் தண்ணீரில் குளிக்கவும்.. இதனால் துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்து, அதிக வியர்வை வடியும் பகுதியில் தடவவும். பிறகு சுத்தமான தண்ணீரில் குளிக்கவும்.
உடல் துர்நாற்றத்தை போக்க, துர்நாற்றம் வீசும் பகுதியில் படிகாரத்தை கைகளால் லேசாக தேய்க்கவும். இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. அதனால் இது உடல் துர்நாற்றத்தை நீக்குகிறது.
குளிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகர் அல்லது கற்பூர எண்ணெய்யை சேர்த்து விட்டு குளிக்கவும். இதனால் உடலில் இருந்து வியர்வை வாசனை வராது.
உடல் துர்நாற்றத்தை நீக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். அதை துண்டுகளாக வெட்டி உங்கள் கை அக்குள் பகுதி மற்றும் பாதங்களில் தடவி விட்டு பின்பு வழக்கம் போல் குளிக்கவும்.
குறிப்பு: அலர்ஜி, தோல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் அனுமதி கேட்ட பின்பு இந்த வைத்தியங்களை ட்ரை செய்யவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com