rose water benefits

Rose Water Benefits : முகத்திற்கு தினமும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாமா? கூடாதா?

முகத்தை அழகாக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது பழைய முறையாகும். பெரியவர்களும் தங்கள் அழகை அதிகரிக்க இதை பயன்படுத்தினர்.நீங்களும் உங்கள் அழகை அதிகரிக்க ரோஸ் வாட்டரை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
Editorial
Updated:- 2023-04-17, 14:41 IST

சருமம் மற்றும் முகத்தை அழகாக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது பழைய முறை. அதே சமயம் பலருக்கு ரோஸ் வாட்டரை தினமும் முகத்திற்கு பயன்படுத்தலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான பதில் நிச்சயம் பயன்படுத்தலாம். ரோஸ்வாட்டரை சீரமாகவும், டோனராகவும் தினமும் முகத்தில் பயன்படுத்தினால் பல நன்மைகளை பெறலாம்.

ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்

சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது.. முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் உள்ளன. ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன . இது முகப்பரு, பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் ரோஸ் வாட்டர் முகப்பரு பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:ஐப்ரோ எடுத்த பின்பு அதிகம் வலிக்கிறதா? இதை செய்யுங்கள்

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் பண்புகள் ரோஸ் வாட்டரில் உள்ளன.. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. தவறான வாழ்க்கை முறை காரணமாக முகம் மற்றும் கண்களுக்கு கீழே அடிக்கடி வீக்கம் ஏற்பட தொடங்குகிறது. ரோஸ் வாட்டரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தில் உள்ள வீங்கிய பகுதிகளில் தடவ வேண்டும்.

rose water in tamil

ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்துங்கள்

  • முகத்தில் இருக்கும் சுருக்கங்களுக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் முகம் வயதானது போல் காட்சியளிப்பதை குறைக்கலாம். இது சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் கோடுகளை குறைக்கவும் உதவுகிறது.
  • சிலருக்கு வெயிலில் செல்லும் போதும் முகம் சிவப்பாக மாறிவிடும். இதை ஆங்கிலத்தில் சன் பர்ன் என அழைப்பார்கள். ரோஸ் வாட்டரில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சன் பர்ன் வருவதை தடுத்து அதை குறைக்க உதவுகிறது. தோல் நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ-ரேடிக்கல்களின் விளைவை குறைக்கவும் ரோஸ் வாட்டர் உதவுகின்றன.
  • கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை குறைக்க ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைக்கவும். இப்படி செய்வதால் கருவளையங்களை குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:கழுத்து கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உங்கள் முகம் மற்றும் சருமத்தை அழக்காக நீங்களும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com