herzindagi
thick hair main

Thick Hair Remedy: ரொம்ப வேகமா முடி அடர்த்தியாக வளர வீட்டு வைத்தியம்

முடி அடர்த்தியாக வளர வீட்டு வைத்தியம் பயன்படுத்துவது ரொம்ப முக்கியம். ஏனென்றால் வீட்டுப் பொருட்களில் எந்தவிதமான ரசாயனமும் இருக்காது.
Editorial
Updated:- 2023-06-28, 16:10 IST

தலைமுடியைச் சரியான முறையில் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இதற்காக நாம் பலவிதமான முடி பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம். அதே நேரத்தில் சில சமயங்களில் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுகிறோம்.

முடி அடர்த்தியாக வளர வைக்க வெளியில் கிடைக்கும் பொருட்களுக்குப் பதிலாக வீட்டு பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரி நம்மிடம் கூறுகையில், வெந்தய விதைகள் முடி அடர்த்தியாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடி அடர்த்தியாக இருக்க வெந்தய விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்:  மழைக்காலங்களில் முடி உதிர்வதை தடுக்க சிறந்த வீட்டு வைத்தியம்

தேவையான பொருட்கள்

  • வெந்தய விதைகள்
  • அலோ வேரா ஜெல்

வெந்தய விதைகளின் நன்மைகள்

vendayam

  • வெந்தயம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மெல்லிய முடி அடர்த்தியாக்க உதவுகிறது.

அலோ வேரா ஜெல்லின் நன்மைகள்

  • அலோ வேரா ஜெல் உச்சந்தலையில் இருந்து அனைத்து வகையான தொற்றுகளையும் நீக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • கற்றாழை முடியை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
  • கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் முடியை ஆரோக்கியமாக இருக்க வேலை செய்கிறது.

உபயோகிக்கும் முறை

 thick hair

  • முதலில் வெந்தயத்தை நன்றாக அரைத்து வடிகட்டவும்.
  • வெந்தயத்தை வடிகட்டிய பிறகு 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு கற்றாழை ஜெல் சேர்க்கவும்.
  • உங்கள் உச்சந்தலையில் உலர்ந்திருந்தால் வைட்டமின்-இ கேப்ஸ்யூலை வெட்டி அதில் சேர்த்து கொள்ளலாம்.
  • இவை அனைத்தையும் கலந்து உச்சந்தலையிலிருந்து முடியின் நீளம் வரை தடவவும்.
  • சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் முடியை அப்படியோ விடவும்.
  • இதற்குப் பிறகு தலைமுடியைத் தண்ணீரின் கழுவவும்.
  • ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் தலைமுடியை கழுவிய பிறகு சிறிய மாற்றத்தைக் காண்பீர்கள்.
  • இந்த செய்முறையை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சில நாட்களில் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்

 

இந்த பதிவும் உதவலாம்:  தலைமுடி பளபளப்பாகவும் நீண்டு வளர மருதாணி ஹேர் மாஸ்க்!

குறிப்பு: எந்தவொரு செய்முறையையும் முயற்சிக்கும் முன் உங்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யவும்.

 முடியை அடர்த்தியாக மாற்றுவதற்கான எளிய வழி உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த கட்டுரையைப் பகிர மறக்காதீர்கள். மேலும், கீழே உள்ள கருத்துப் பிரிவில் இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 

உங்களுக்கு சரியான தகவலை வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க Herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

 

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com