Monsoon Hair Fall Remedy: மழைக்காலங்களில் முடி உதிர்வதை தடுக்க சிறந்த வீட்டு வைத்தியம்

மழைக்காலங்களில் முடி உதிர்வதைத் தடுப்பது ஒரு கடுமையான சவாலாக இருக்கும். அதை எளிமையாக கையாள இதோ சில உதவி குறிப்புகள்

monsoon hair fall

மழைக்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் தலையின் ஈரப்பதம் அளவு மாறுபடுவதால் பொடுகு, முடி உதிர்வது போன்ற பிரச்சனைகள் வருகின்றது. மழைக்காலங்களில் கூந்தலில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் முடி சுருள்வது மற்றும் உடையக்கூடியதாக ஆக்குகிறது. ஈரப்பதம் காரணமாக முடியை உலர வைத்து பலவீனமாக இருக்கும் முடியின் வேர்களைப் பலவீனப்படுத்துகிறது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தர்க்க சில சிறந்த குறிப்புகளைப் பார்க்கலாம்.

மழைக்காலத்தில் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள்

hair fall monsoon

  • மழைக்காலங்களில் வெளியில் இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் நனைந்தால் வீடு திரும்பிய உடனேயே தலைமுடியைக் கழுவினால் உச்சந்தலையையும் முடியையும் சுத்தமாக வைத்திருக்க முடியும். மழைக்காலத்தில் முடி உதிர்வைத் தடுக்க சிறந்த வழியாகும்
  • தினமும் ஹேர் சீரம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம் அது கூந்தலை நன்கு பராமரிக்க உதவும்.
  • மழைக்காலத்தில் தலைமுடியை தளர்வாக விடா கூடாது. முடிந்த வரை பின்னல் போன்ற ஹேர் ஸ்டைல்களை பயன்படுத்துங்கள்.
  • மழைக்காலத்தில் முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்ப்பது நல்லது.
  • மழைக்காலங்களில் கண்டிப்பாக ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். இது உங்கள் தலைமுடியை மென்மையாக வைத்திருக்க உதவும்.
  • மழைக்காலங்களில் குளித்த உடன் தலைமுடியைக் காயவைப்பது நல்லது, இல்லையென்றால் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் முடிகளைச் சீக்கிரம் தாக்கும்.

முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த ஹேர் பேக்

வெந்தய விழுதை ஹேர் பேக்

வெந்தயத்தில் உள்ள நிகோடினிக் அமிலம் முடி உதிர்தலை தடுக்கும்

பயன்படுத்தும் முறை:

  • ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்
  • இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலை பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் தலையில் தடவி 30 நிமிடங்கள் விடவும்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

மருதாணி பேஸ்ட்

henna

மருதாணி ஒரு இயற்கையான முடி கண்டிஷனர். தலைமுடிக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு இது மழைக்கால தலைமுடி சார்ந்த நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. முடியை பலப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து அளிக்கிறது.

பயன்படுத்தும் முறை:

  • 250 மில்லி சூடான கடுகு எண்ணெயில் ஒரு கப் மருதாணி இலைகளைச் சேர்க்கவும்
  • நிறம் மாறும்போது கலவையை வடிகட்டவும்
  • தினமும் தலையில் தடவி வரலாம்.
  • நன்றாக மசாஜ் செய்து சில மணி நேரம் விட்டுவிடவும்
  • 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியைக் கழுவவும்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP