பெண்கள் முகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கழுத்துப் பகுதிகளுக்கு ஒருபோதும் கொடுப்பதில்லை. முகம் பளபளப்புடனும், கழுத்து பகுதியில் கருப்பாகவும் இருந்தாலும் என்ன ஆடை அணிந்தாலும் அழகாகத் தெரிய மாட்டார்கள். குறிப்பாக மாடர்ன் ஆடைகளை அணிய வேண்டும் என்று நினைத்தாலும் கழுத்தில் கருமை நிறம் அதை வேண்டாம் என்று தான் சொல்லும். ஆம் முகத்தில் ஒரு நிறமும், கழுத்தில் ஒரு நிறமும் இருந்தாலும் நிச்சயம் நன்றாக இருக்காது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? எளிய வீட்டு வைத்திய முறைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
கழுத்தில் கருமை நிறம் ஏற்படக்காரணம்?: பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்புப் பண்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்துப் பகுதி மட்டும் கருமையாகக்கூடும். இது பெண்களின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.
மேலும் படிக்க: வசீகர முகத்தைப் பெற வேண்டுமா? காபி பேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய்: கழுத்தில் உள்ள கருமை நீங்குவதற்குத் தேங்காய் எண்ணெய் சிறந்தத் தேர்வாக அமையும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடேற்றி கழுத்துப் பகுதியில் தடவிய பின்னதாக, நகங்களால் லேசாக ஸ்கர்ப் செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு வெது வெதுப்பான நீரில் தேய்த்துக் குளிக்கவும். இதுபோன்ற தினமும் செய்து வரும் போது கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும்.
புளி மற்றும் தயிர்: சூடான தண்ணீரில் ஊற வைத்த புளியை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர், மஞ்சள் மற்றும் தயிரை ஊற்றி அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும். பின்னர் கழுத்தில் உள்ள கருமையான இடங்களில் தேய்த்து 30 நிமிடங்களுக்குப் பிறகு அலசினால் போதும். புளியில் உள்ள ஆல்பா ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் கழுத்தில் உள்ள கருமையைப் போக்க உதவியாக இருக்கும்.
கழுத்தில் உள்ள கருமையைப்போக்குவதற்கு ஆரஞ்சு தோலை மற்றும் பால் ஒன்றாக அரைத்து அப்பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். ஆரஞ்சில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கழுத்துக் கருமையை ஏற்படுத்தக்கூடிய டைரோசின் கலவைக்கு எதிராகப் போராடுவதால் நல்ல பலனளிக்கும்.
கற்றாழை ஜெல்லுடன் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து கழுத்துப்பகுதியில் ஸ்கரப் செய்ய வேண்டும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் கழுத்தில் உள்ள கருமையை நீக்க உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: பொடுகு தொல்லையா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!
இதே போன்று கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கரப் செய்ய வேண்டும். பேக்கிங் சோடாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு உதவியாக உள்ளது.
Image source- Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com