Home Remedies for Dandruff: பொடுகு தொல்லையா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!

பெண்கள் பலருக்கும் இந்த பொடுகு தொல்லை பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதனை வீட்டில் இருந்தபடி எப்படி சரி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

dandruff home remedies

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வயதினரும் பாதிக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இந்த பொடுகு தொல்லை. குறிப்பாக இளம் பெண்களுக்கு இது பல நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நம்மில் பலரும் பொடுகு தானே என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம் இதனை ஆரம்ப காலத்தில் கண்டு கொள்ளாமல் விட்டால் நாளடைவில் தலைமுடி உதிர்வு பிரச்சினைகள் ஏற்படலாம் அதுமட்டுமின்றி ஒரு சில நேரங்களில் இந்த பொடுகு தொல்லையினால் தோல் வியாதிகள் கூட உருவாக வாய்ப்புகள் அதிகம் அதே போல பொடுகு பிரச்சனை இருந்தால் முகத்தில் முகப்பருக்கள் உருவாகும். கழுத்திலும் காது பின்புறத்திலும் தோல் நோய்கள் ஏற்படலாம்.

தலையில் பொடுகு ஏற்பட காரணம் என்ன?

மன அழுத்தம் வறண்ட சருமம் ஹார்மோன் மாறுபாடு ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் தலையை சுத்தமாக பராமரிக்காதது போன்றவைகள் இந்த பொடுகு பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஆகும். சில நேரங்களில் நாம் உபயோகிக்கும் ஷாம்புகளும் கண்டிஷனரும் கூட தலைமுடி பிரச்சனைகளை உருவாக்கலாம். பல ஷாம்புகளில் கெமிக்கல்ஸ் அதிகமாக இருப்பதால் இது நம் சருமத்தை வறட்சி அடைய செய்து நாளடைவில் தலையில் பொடுகு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பொடுகு தொல்லை நீங்க வீட்டில் செய்யக்கூடிய எளிதான வழிமுறைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பொடுகு தொல்லைக்கு வீட்டு வைத்தியம்:

dandruf
  • தலையில் பொடுகு தொல்லை நீங்க பாலுடன் சிறிதுமிளகு பவுடரை சேர்த்து உங்கள் தலையில் தேய்த்து வரவும். இதற்குப் பிறகு 15 நிமிடம் கழித்து தலை குளிக்க வேண்டும்.
  • அதேபோல சிறிது சின்ன வெங்காயம் எடுத்து மிக்ஸியில் அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். இதனை 15 நிமிடம் உலர வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.
  • பொடுகு பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் வறண்ட சருமம் இதனை சரி செய்ய தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
  • வாரம் ஒரு முறையாவது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது உங்கள் உடல் சூட்டை கட்டுப்படுத்தி பொடுகு தொல்லை ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
  • எளிய முறையில் பொடுகு தொல்லையை குணப்படுத்த பசலை கீரையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு ஒழியும்.
  • தலைக்கு குளிப்பதற்கு முன்பு வெந்தய பவுடரை தலையில் தேய்த்து உணர வைக்கவும் 15 அல்லது 20 நிமிடங்கள் பிறகு நல்ல ஜில் தண்ணீரில் தலைக்கு குளிக்கலாம்.
  • அதேபோல அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு காய்ச்சி இதனை ஆற வைத்து தினமும் தலையில் தேய்த்து வந்தால் நாளடைவில் பொடுகு மறையும் மேலும் செக்கு தேங்காய் எண்ணெய் கிடைத்தால் இன்னும் நல்லது.
  • பொடுகு தொல்லையை குணப்படுத்த வேப்பிலை பெரிதும் உதவுகிறது. சிறிது வேப்பிலை சாறும் துளசி சாரும் கலந்து தலையில் தேய்க்க வேண்டும் 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP