இந்த காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை பெரும் கவலையை தருகிறது. ஆண்களுக்கு முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை நிலையை அடைந்தால் குடும்ப வரலாறு காரணமாக முடி கொட்டிவிட்டது என கூறிவிடலாம். ஆனால் பெண்ணுக்கு முடி உதிர்வு ஏற்பட்டு சொட்டை விழுவது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு என உணர்த்துகிறது. தினசரி முடி கொட்டுததால் சிரமப்படுவோர், வேக வேகமாக முடி உதிர்ந்து தலை வழுக்கை நிலையை அடைய இருக்கும் நபர்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என அர்த்தமாகிறது.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு சில சூப்பர் ஃபுட்ஸ் உள்ளன. இவை தலைமுடி கொட்டுவதை நிறுத்தி பொடுகு மற்றும் பேன் தொல்லை ஆகியவற்றுக்கும் நல்லது. தலைமுடியை பராமரிக்கிறோம் என்ற பெயரில் ஹீட்டர் பயன்படுத்தி முடியை வறட்சி செய்வதை நிறுத்தி விடுங்கள். ஆண்களுக்கு வரக்கூடிய தலையின் முன்பகுதி வழுக்கை, நடுப்பகுதி வழுக்கை என்பதெல்லாம் பரம்பரை காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. இதை நம்மால் தடுக்க முடியுமா என்றால் அது மிக மிக சிரமம்.
ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணமானது. நமக்கு தலைமுடி கொட்டவே கொட்டாது என நினைக்க முடியாது. தலைமுடி வளருவதற்கு தினசரி உணவுபழக்கத்தில் சிலவற்றை சேர்த்துக்கொள்வது நல்ல பலனை தரும். இதில் முக்கியமான உணவு என்றால் அது ஐந்து ரூபாயில் கிடைக்கும் முட்டை தான்.
முட்டை மேஜிக்
முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளை கருவை சாப்பிடுவது அல்லது பச்சையாக உடைத்து தலையில் பயன்படுத்துவது முடியின் ஆரோக்கியத்தை பெருமளவு பாதுகாக்கும். முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள், தாதுக்கள் தான் அதிகம் தேவையானவை. அதிலும் பயோட்டின், ஃபோலேட், வைட்டமின் டி போன்ற சத்துகள் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் இருக்கிறது. முடி வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். முட்டையில் செலீனியம், தத்துநாகம் போன்ற சத்துகளும் இருக்கின்றன.
மேலும் படிங்ககுழந்தைகளின் மூளை செயல்திறனை அதிகரிக்கும் எட்டு சிறந்த உணவுகள்
முட்டையின் மஞ்சள் கருவையும், ஆலிவ் எண்ணெய்யும் கலந்து அதை தலையில் தடவலாம். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும். இதே போல முட்டையின் வெள்ளை கருவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். முடி வளர்ச்சிக்கு புரத சத்து தேவை. ஒரு முட்டையில் ஆறு கிராம் புரதம் இருக்கிறது.
டயட் இருப்பது, அதிக உடற்பயிற்சி செய்வது முடி இழப்புக்கு வழிவகுக்கும். உணவுப் பழக்கத்தை மாற்றவது முடி உதிர்வை ஏற்படுத்தாது. ஆனால் சாப்பிடும் உணவுகளின் அளவை குறைப்பது முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. இதனால் சாப்பிடும் அளவுகளை படிப்படியாக குறைக்கலாம். முடி வளர்ச்சிக்கு இனிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
360 டிகிரி ஜூஸ்
முடி வளர்ச்சிக்கு தினமும் கறிவேப்பிலை அல்லது நெல்லிக்காய் அல்லது பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும். இந்த மூன்று ஜூஸ்களையும் ஒரே நாளில் கூட குடிக்கலாம். இவை 360 டிகிரி ஜூஸ் என்று அழைக்கப்படுகின்றன. அதே போல பாதாம், நட்ஸ், இரும்புச் சத்து அதிகம் கொண்ட கீரைகள், சியா விதைகள் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு நல்லது.
மேலும் படிங்கபுரதச்சத்து குறைபாடா ? நீங்கள் சாப்பிட வேண்டிய சைவ, அசைவ உணவுகள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation