முடி உதிர்தல் பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் வழக்கத்தை விடவும் அதிகப்படியான முடி உதிர்வதாக பெண்கள் பலரும் கவலை கொள்கின்றனர். அதற்கு என்ன காரணம்? என்பதையும் அதை சரிசெய்யும் முறைகள் குறித்து இப்போது பார்ப்போம். தலைமுடி அதிகம் உடைவதாலும் அடிக்கடி முடியை அலச முடியாமல் போவதாலும் முடி உதிர்தல் பிரச்சனை மிகப்பெரிய தொந்தரவாக உருவெடுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடி உதிர்ந்து அதன் அளவு பாதியாக குறைவதற்கு முன்பே சில வழிமுறைகளை பின்பற்றி முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது பெரும் சிக்கலான ஒன்று. இந்த சீசனில் முடி வறட்சி, அரிப்பு தொல்லை போன்றவை அதிகமாகவே இருக்கும். முடியின் வேர் முதல் நுனி வரை அதிகப்படியான வறட்சி ஏற்படும் போது முடி அதிகம் உதிர தொடங்குகிறது.வெயில் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்கள் வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் அதிகம் வியர்க்காது. உடலில் நச்சுத்தன்மை அதிகமாகும் போது, முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தலைமுடிக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன?
பொடுகு பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனால் உச்சந்தலையில் அரிப்பும் ஏற்படும். இது, பொதுவாக குளிர்காலத்தில் அதிகம் காணப்படுகிறது. பொடுகு தொல்லை காரணமாகவும் இந்த சீசனில் முடி அதிகம் உதரலாம்.குளிர்காலத்தில் பலரும் தண்ணீர் குடிக்கும் அளவை குறைத்து கொள்கின்றனர். இதனால் உடலுக்கு தேவைப்படும் நீர்ச்சத்தின் அளவில் பற்றாக்குறை ஏற்படுகிறது. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாத போது, முடி அதிகம் உதிர தொடங்குகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com