Face Brightening Juice: முகம் கலராக மாற இந்த ஜூஸ்களை குடித்தால் போதும்!

இயற்கை முறையில் ஒரே வாரத்தில் கலராக மாற இந்த ஜூஸ்கள் பெரிதும் உதவுகிறது.

fair skin

நம்மில் பலருக்கும் வெயிலில் அதிக நேரம் செல்லும் போது நம் சருமம் டேன் ஆவது உண்டு. அதாவது நம் சருமம் கலர் கம்மியாக மாறிவிடுகிறது. இப்படி திடீரென்று கலர் மாறிய நபர்கள் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மீண்டும் கலராக மாற முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த சில பழங்களும் காய்கறிகளும் நாம் கலராக மாற பெரிதும் உதவுகிறது.

ஒரு சில பெண்கள் கல்யாண நிகழ்ச்சிகள் அல்லது ஏதேனும் குடும்ப விழாக்களுக்கு செல்லும்போது பிரைட் ஆக கலராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுக்காக சிலர் ஹெவி மேக் அப் அணிவது வழக்கம். வெறும் ஏழு நாட்களில் ஆரோக்கியமான சில உணவு முறையை பின்பற்றினால் நீங்களும் நல்ல கலராக மாறலாம். அது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கலராக மாற உதவும் ஜூஸ்கள்:

வெறும் ஏழு நாட்களில் உங்கள் முகம் வெள்ளையாக நல்ல கலராக மாற குடிக்க வேண்டிய ஆரோக்கிய ஜூஸ்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

மாதுளை ஜூஸ்:

pomo juice ()

பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் ஒரு ஜூஸ் இந்த மாதுளை ஜூஸ். உங்கள் சருமத்தை அழகாகவும் பிரஷ் ஆகவும் வைத்துக்கொள்ள தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வரலாம். வெளியில் வாங்கி குடிக்கும் மாதுளை ஜூஸை விட நீங்களே வீட்டில் மாதுளை பழம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஜூஸ் அடித்து குடிக்கலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டது.

ஆரஞ்சு ஜூஸ்:

பெண்கள் பலரும் கட்டாயம் குடிக்க வேண்டிய ஒரு ஜூஸ் ஆரஞ்சு ஜூஸ். இந்த ஆரஞ்சு ஜூஸ் தலை முதல் கால் வரை பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு சிலருக்கு இந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் சளி பிடிக்கலாம். அப்படியானால் அவர்கள் ஐஸ் சேர்க்காமல் தினமும் காலையில் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வரலாம்.

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை செய்கிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலில் இரும்பு சத்து குறைபாட்டை நீக்குகிறது. அதேபோல சருமத்தின் நிறம் மாறுவதற்கும் பீட்ரூட் ஜூஸ் பெரிதும் உதவுகிறது. பீட்ரூட்டை அரைத்து நம் உதடுகளில் தேய்த்து வந்தால் கருமையான உதடுகள் கூட பிங்க் நிறமாக மாறும்.

ஏபிசி ஜூஸ்:

abc juice ()

ஆப்பிள் பீட்ரூட் கேரட் இதை எல்லாம் ஒன்று சேர்த்து செய்யப்படும் ஜூஸ் தான் இந்த ஏபிசி ஜூஸ். நம் முகத்தை அழகாக மாற்றி சருமத்தின் நிறத்தை கூட்ட இந்த ஏபிசி ஜூஸ் உதவுகிறது. அதேபோல சருமம் பொலிவாகவும் கலராகவும் மாற இந்த ஏபிசி ஜூஸை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை குடித்து வரலாம்.

பப்பாளி ஜூஸ்:

நம் சருமத்தை பொலிவாகவும் மென்மையாகவும் மாற்ற இந்த பப்பாளி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. இதனை தினமும் குடித்து வந்தால் சருமம் கலராக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பப்பாளி ஜூஸில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் அடிக்கடி பசி எடுக்காமல் தவிர்க்க உதவும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பப்பாளி ஜூஸ் குடித்து வரலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP