herzindagi
skin packs

Oily Skin Face Pack : எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக் இனி வீட்டிலேயே செய்யலாம்

எண்ணெய் பசை சருமம் கொண்ட பெண்கள், இந்த ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். 
Editorial
Updated:- 2023-08-09, 13:57 IST

எண்ணெய் பசை சருமத்தை தனி கவனம் எடுத்து பராமரிப்பது மிக மிக அவசியம். அதே போல், எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். முகத்தைச் சுத்தம் செய்யாவிட்டால் அழுக்குகள் தேங்கி பருக்கள் உருவாகும். எண்ணெய் சருமத்திற்கு ஃபேஸ் பேக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அவற்றை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

எனவே, இந்த பதிவில் எளிமையான முறையில் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

முல்தானி மெட்டியை வைத்து ஃபேஸ் பேக் தயார் செய்யுங்கள்

face pack for oily skin

 

முல்தானி மெட்டி சருமத்திற்கு மிகவும் நல்லது. இதைப் பயன்படுத்துவதால் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் குறையும்.

தேவையான பொருட்கள்

  • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
  • முல்தானி மெட்டி – 1 டீஸ்பூன்

செய்ய வேண்டியவை

  •  ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டியை  சேர்க்கவும்.
  •  பிறகு அதில் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  •  வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் இப்போது தயார். 

பயன்படுத்தும் முறை

  • முல்தானி மெட்டி பேக்கில் பிரஷை போட்டு தோய்த்து எடுக்கவும்
  • .பின்பு, அந்த பிரஷை வைத்து முகம் முழுவதும் பேக்கை பூசவும்.
  • பேக் காய்ந்து வரும் வரை காத்திருக்கவும்.
  • அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.
  • முகத்தை சுத்தம் செய்த பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.

ஓட்ஸை வைத்து ஃபேஸ் பேக் தயார் செய்யுங்கள்

ஓட்ஸில் சருமத்தை உறிஞ்சும் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்கும் தன்மை கொண்டது. மேலும், ஓட்ஸ் சரும துளைகளை நீக்குகிறது. அதே சமயம் தேன் சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்குகிறது, இது சருமத்தில் எண்ணெய் அளவை குறைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

night face pack

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் – 1 கிண்ணம்
  • தேன் – ½ டீஸ்பூன்

செய்ய வேண்டியவை

  • முதலில் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
  • அரைத்த ஓட்ஸ் பொடியை ஒரு கிண்ணத்தில் கொட்டவும்.
  • பின்பு, அதில் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இப்போது, எண்ணெய் பசை சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக் தயார். 

இந்த பதிவும் உதவலாம். இரவில் பயன்படுத்த வேண்டிய சிறந்த பேஸ் பேக் பற்றி தெரியுமா உங்களுக்கு?

பயன்படுத்தும் முறை 

  • இந்த பேக்கை முகத்தில் தடவவும்.
  • பின்பு, கழுத்து பகுதியிலும் நன்கு தடவவும்.
  • இந்த பேக்கை 15 நிமிடங்கள் வரை அப்படியே காய விடவும்.
  • இப்போது முகம் மற்றும் கழுத்து இரண்டையும் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும்.

சரும பராமரிப்பு டிப்ஸ்கள்

face pack

  • எண்ணெய் பசை சருமம் கொண்ட பெண்கள் தினமும் முகத்தை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • டோனரைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
  • ஃபேஸ் மாஸ்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உங்களுக்கும் எண்ணெய் பசை சருமம் இருந்தால் நீங்களும் இதை கட்டாயம் பயன்படுத்தலாம். 
  • எண்ணெய் பசை சருமம் உள்ள பெண்கள் மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது சருமத்திற்கு மிகவும் நல்லது. 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com