குளிர்காலத்தில் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். சுற்றுச்சூழலில் வறட்சி ஏற்படுவதால், சருமம் வறண்டு, உயிரற்றதாகிவிடும். அதுபோன்ற குளிர்க்காலத்தில் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சருமம் மெதுவாக மோசமடையத் தொடங்குகிறது. குளிர்காலத்தில் முகத்திற்கு பயன்படுத்தப்படும் வெந்நீர் சருமம் மோசமடைய செய்ய ஒரு முக்கிய காரணம். இரவு மற்றும் காலை வேளைகளில் செய்யப்படும் சருமப் பராமரிப்பு வழக்கங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ரசாயன அடிப்படையிலான பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவதால் நமது சருமம் பாதிக்கப்படும். அதனால் முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க: குளிர் கால பொடுகு தொல்லையால் முடி கொத்து கொத்தாய் கொட்டுகிறதா... ஒரே வாரத்தில் தீர்வு தரும் ஹேர் மாஸ்
சருமத்தை பளபளப்பாக மாற்ற குளிர்காலத்தில் சில வீட்டு வைத்தியங்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் உங்கள் சருமத்தில் எந்தவித பக்கவிளைவுகளும் குளிர்காலத்தில் ஏற்படாமல் சருமம் பளபளப்பாக இருக்கும். நீங்களும் இந்த குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால், அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரி பரிந்துரைத்த இந்த இரண்டு விஷயங்களையும் தினமும் காலையில் எழுந்தவுடன் முகத்தில் தடவவும். இதைச் செய்வதன் மூலம், சில நாட்களில் சருமம் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். அந்த இரண்டு விஷயங்கள் என்ன என்பதையும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழியையும் பார்ப்போம்.
பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை பால் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள இயற்கையான மாய்ஸ்சரைசிங் பண்புகள் சருமத்தை மிகவும் மென்மையாக வைத்திருக்கும். பச்சை பால் சருமத்திற்கு சிறந்த சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. அதாவது அதன் உதவியுடன் நம் முகத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அகற்றலாம். இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. இது சரும வறட்சியை நீக்குகிறது.
குளிர்காலத்தில் விசப்படும் குளிர்ந்த காற்றில் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க விரும்பினால் காலையில் எழுந்தவுடன் தினமும் சுமார் 5 நிமிடங்களுக்கு முகத்தை பச்சை பால் கொண்டு மசாஜ் செய்யவும். 2 ஸ்பூன் பாலை கையில் எடுத்து முகம் முழுவதும் நன்றாக தடவ வேண்டும், அதன்பிறகு சிறிது நேரம் அப்படியே விடவும். நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு வாரத்தில் முகத்தில் நல்ல வித்தியாசத்தைக் காணத் தொடங்குவீர்கள்.
கிளிசரின், ரோஜா மற்றும் தேன் அனைத்தும் சருமத்திற்கு நன்மை பயக்கும். அவற்றைப் பயன்படுத்துவதால் சருமம் பளபளப்பாகும். தேன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தும் போது நீரேற்றத்துடன் சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் கிளிசரின் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த மூன்றையும் முகத்தில் தடவி வந்தால் சருமம் பளபளக்க ஆரம்பிக்கும்.
ஒரு பாத்திரத்தில் தேன், கிளிசரின், மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்க வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் பச்சை பால் சேர்த்து இந்த கலவைகளை கரண்டியால் நன்கு கலக்கவும். இதை எடுத்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் விட்டு விடுங்கள். அது காய்ந்ததும், முகத்தை வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரில் கழுவவும்.
மேலும் படிக்க: வேகமாக முடி வளர்ச்சி இருக்கனுமா.. இந்த 4 விதைகளை உங்கள் உணவில் சேருங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com