இணையத்தில் பல்வேறு வகையான முகப் பராமரிப்பு தயாரிப்புகள் மற்றும் தோல் பராமரிப்பு ஹேக்குகள் இருக்கின்றது அவை சிறந்த முடிவுகளைக் கொண்டிருக்கின்றன, அவை அடிக்கடி முயற்சி செய்ய நம்மைத் தூண்டுகின்றன. ஆனால் சில மார்க்கெட்டிங் வித்தைகள், மற்றவை ஒவ்வொரு தோல் வகைக்கும் பொருந்தாது. எனவே, உங்கள் முகத்தில் எதையும் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்து, உங்கள் சருமத்தின் வகையைக் கருத்தில் கொள்வது அவசியம். உங்கள் முகத்தில் பயன்படுத்தக்கூடிய சில பராமரிப்பு பொருட்களைப் பற்றி பார்க்கலாம்.
சன் ஸ்கிரீன் என்பது சருமப் பராமரிப்புப் பொருட்களில் முக்கியமான ஒன்றாகும், இது நாம் அனைவரும் தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாப்பாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் உங்கள் முகத்தில் காலாவதியான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இது உங்கள் முகத்தில் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டியது முக்கியம்.
Image Credit: Freepik
எலுமிச்சம் பழச்சாற்றைச் சருமத்தில் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு இணையத்தில் பல தோல் பராமரிப்பு ஹேக்குகள் உள்ளன. இந்த DIY ஸ்கின்கேர் ஹேக்குகள் எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தை பிரகாசமாக்கி, வெண்மையாக்குகிறது. இது சிலருக்கு உண்மையாக இருக்கலாம் ஆனால் அதிக அளவு சிட்ரிக் அமிலம் சருமத்தில் பயன்படுத்தினால் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். முகத்தில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.
மேலும் படிக்க: பளிச்சென்று ஒரே இரவில் முகம் வெளுக்க நைட் அரிசி பேஸ் கிரீம் தடவுங்க
டூத் பேஸ்டில் இரசாயனங்கள் உள்ளன என்பதை அனைவருக்கும் தெரியும், ஆனால் இணையத்தில் சில தோல் பராமரிப்பு ஹேக்குகள் பிளாக்ஹெட்ஸ் மற்றும் பருக்களை போக்க டூத் பேஸ்ட்ப் பயன்படுத்துகின்றன. ஆனால் டூத் பேஸ்டில் இரசாயனங்கள் உள்ளதால் சருமத்தை சேதப்படுத்தும், இது தீக்காயங்கள் மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
Image Credit: Freepik
ஷாம்பூவில் பொடுகு போன்ற முடி பிரச்சினைகளுக்கு எதிராகச் செயல்படும் ரசாயனங்கள் உள்ளதால் ஊச்சந்தலையை தவிர்த்து, உடலில் உள்ள மற்ற சரும பகுதியில் தடவினால் சருமம் வறண்டு மற்றும் செதில்களாக வரச் செய்யும்.
சுத்தமாகத் தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு தோல் வகைக்கும் பொருந்தாது. தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால் சருமத்தின் துளைகளை அடைத்துவிடும். உங்கள் முகத்தை மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம், ஆனால் அதை மிகைப்படுத்தாதீர்கள்.
Image Credit: Freepik
பெரும்பாலானோர் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களைப் போக்க மெழுகைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது வளர்ந்த முடிக்கு வழிவகுக்கும், சூரியனுக்கு உணர்திறன், தடிப்புகள் மற்றும் சில சமயங்களில் வடுக்கள் ஏற்படலாம்.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் வறண்டு போகாமல் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க 7 மலாய் ஃபேஸ் பேக்குகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com