herzindagi
use cucumber to hydrate your skin in easy ways

சரும வறட்சி, முக சுருக்கம் அனைத்தையும் சரி செய்ய வெள்ளரிக்காய் டிப்ஸ்!!!

சரும வறட்சி மற்றும் முக சுருக்கம் உங்கள் அழகை கெடுக்கிறதா?இதோ அருமையான டிப்ஸ்.
Editorial
Updated:- 2022-12-13, 12:10 IST

நாம் நம் முகத்தை நன்கு கவனித்து, அவ்வப்போது நமது சருமத்தை ஈரப்பதமாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் இன்று வீட்டில் இருக்கும் வெள்ளரிக்காயில் இருந்து சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான வீட்டு வைத்தியத்தை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம், இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல், புதிய பளபளப்பையும் தரும்.

வெள்ளரி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய், தயிர் இரண்டுமே நம் சருமத்திற்கு குளிர்ச்சியையும், ஈரப்பதத்தையும் தருகிறது. உங்கள் முகம் பொலிவற்று இருந்தால் அல்லது திடீரென்று எங்காவது செல்ல வேண்டியிருந்தால், சருமத்தை ஈரப்பதமாக்க இந்த முறையைப் பின்பற்றலாம். கூடுதல் நன்மைகளைப் பெற, நீங்கள் இதில் தேனையும் சேர்க்கலாம். இது உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளாது, தயாரிப்பதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது.

தேவையானவை

  • தயிர் - 1 டீஸ்பூன்
  • வெள்ளரிக்காய் - 2 டீஸ்பூன் துருவியது
  • தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை

cucumber facial

  • ஒரு பாத்திரத்தில் தயிர், துருவிய வெள்ளரிக்காய் மற்றும் தேன் சேர்த்து, நன்றாக கலக்கி கொள்ளவும் .
  • இப்போது அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

பளபளப்பான சருமத்திற்கு வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கு

ஆரோக்கியத்துடன் சேர்த்து உருளைக்கிழங்கு நமது சரும தொடர்பான பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது நம் முகத்தில் உள்ள கறைகள் மற்றும் பருக்களை குறைப்பதுடன், நமது சருமத்திற்கு புதிய பொலிவை தருகிறது. அதனுடன் ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டியைச் சேர்த்தால் அதன் பயன் இரட்டிப்பாகும். இந்த ஃபேஸ் பேக் எப்படி தயாரிக்கப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • உருளைக்கிழங்கு சாறு - 1 தேக்கரண்டி
  • வெள்ளரி சாறு - 1 டீஸ்பூன்
  • முல்தானி மிட்டி - 1 டீஸ்பூன்

செய்முறை

potato facial

  • ஒரு பாத்திரத்தில் முல்தானி மிட்டியை எடுத்து அதில் வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கு சாறு இரண்டையும் நன்கு கலக்கவும்.
  • இப்போது அதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் விடவும்.
  • அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு வெள்ளரி மற்றும் தக்காளி

எல்லோருடைய சருமமும் வித்தியாசமானது என்பது நமக்குத் தெரியும், கற்றாழை ஜெல் சிலருக்குப் சேராது, சிலருக்கு உருளைக்கிழங்கு சேராது. சிலருக்கு சருமம் வறண்டு இருக்கும், ஒரு சிலருக்கு எண்ணெய் வடிந்து இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், இந்த செய்முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையானவை

  • தக்காளி கூழ் - 1 டீஸ்பூன்
  • வெள்ளரி சாறு - 1 டீஸ்பூன்
  • கடலை மாவு - 1 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: முகத்தில் தக்காளி தடவுவதால் கிடைக்கும் பளபளப்பு!!!

செய்முறை

girl with face mask

  • கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, தக்காளி கூழ் மற்றும் வெள்ளரி சாறு சேர்த்து, நன்கு கலக்கி கொள்ளவும்.
  • இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும்.
  • 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

இதேபோல், உங்கள் சருமம் மற்றும் அழகை பராமரிக்க இன்னும் பல பதிவுகளை நாங்கள் பகிரவுள்ளோம். இந்தத் தகவல் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்ய மறக்காதீர்கள். இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து படிக்க ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com