herzindagi
banana tips tamil

Banana Benefits in Tamil: பெண்களின் முகத்தை ஜொலிக்க வைக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தை வைத்து முகத்தை எப்படி அழகுப்படுத்தலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-02-01, 09:55 IST

சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இதற்காக அவர்கள் சரும பராமரிப்பு முறையில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் முகத்தை அழகாக மாற்ற கடைகளில் பலவகையான அழகு சாதனப்பொருட்கள் விற்படுகின்றன. இவற்றை தேர்ந்தெடுப்பதை விட இயற்கை வழியில் செல்வது நல்ல பலனை தரும். இரசாயனங்கள் கலந்த பொருட்களை காட்டிலும் இயற்கையான முறையில் முகத்தை ஜொலிக்க வைக்க வாழைப்பழம் மட்டுமே போதும்.

எனவே, பெண்கள் தங்களின் சரும பராமரிப்பு முறையில் வாழைப்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். முக அழகை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாக மாற்ற வாழைப்பழத்தை பயன்படுத்தும் முறை குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தின் நன்மைகள்

வாழைப்பழம், சருமத்திற்கு ஒருவிதமான நெகிழ்ச்சித்தன்மையை வழங்குகிறது. இதில் இருக்கும் வைட்டமின்-C முகச் சுருக்கங்களை குறைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:சருமத்தை பளபளப்பாக மாற்ற இந்த 4 ஃபேஸ் மாஸ்க்குகள் போதும்

banana beauty

வாழைப்பழத்தை வைத்து முகத்தை சுத்தம் செய்யும் முறை

சருமத்தை சுத்தம் செய்ய வாழைப்பழத்தில் செய்யப்பட்ட ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். இந்த ஸ்க்ரப்பை தயார் செய்ய, வாழைப்பழத்துடன் சர்க்கரை மற்றும் தேனை சேர்க்கவும். பின்பு இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முகத்தில் தடவி சுத்தம் செய்யவும். இதுத்தவிர மசித்த வாழைப்பழத்துடன் ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து இந்த வகையான ஸ்க்ரப்பையும் முகத்தில் பூசலாம்.

ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை

வாழைப்பழத்தில் இருந்து ஃபேஸ் பேக் தயாரிக்க அதனுடன் பப்பாளி, மாதுளை போன்ற பல பழங்களை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, அதையும் முகத்தில் தடவலாம். இது தவிர, சருமத்தை நெகிழ்வாகவும், பளபளப்பாகவும் மாற்ற, வாழைப்பழத்தில் தேன் மற்றும் வைட்டமின்-E கேப்ஸ்யூல்களை சேர்க்கலாம். சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, பளபளப்பாகவும் மாற்ற வாழைப்பழத்துடன் பால் கலந்தும் முகத்தில் தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்:முதுகு பக்கம் கருப்பா இருக்கா?

நீங்களும் இந்த வழிகளில் வாழைப்பழத்தை பயன்படுத்தி முகத்தை ஜொலிக்க வையுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com