clove face pack main image ()

Clove Remove Acne: மேஜிக் மாதிரி உடனே முகப்பருக்கள் போகணுமா.. இதோ கிராம்பு ஃபேஸ் பேக்!!

முகப்பரு, அடைபட்ட துளைகள் மற்றும் தழும்புகளுக்கான சில குளோவ் ஃபேஸ் மாஸ்க் இங்கே உள்ளன பார்க்கலாம்
Editorial
Updated:- 2023-07-21, 19:30 IST

கிராம்பு சமையல்களில் சுவை மற்றும் வாசனைக்காக சேர்க்க கூடிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். கிராம்பு சமையாலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்ககூடியது. அதில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே பருக்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகளை மிக எளிதாக தடுக்க உதவும் வீட்டில் இருக்கும் சிறந்த பொருட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இது சருமத்தை அசுத்தங்கள் படிவதிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து அவற்றை அடைக்க பயன்படுகிறது மற்றும் சரும அழுக்கு, எண்ணெய் உருவாவதைத் தடுக்கிறது.

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்ட கிராம்பு சருமத்தில் பாக்டீரியாக்கள் இருப்பதை அனுமதிக்காது. கிராம்பு உங்கள் சரும பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவது எப்படி என்று பார்க்கலாம். 

 

இந்த பதிவும் உதவலாம்: க்ளியர் ஸ்கின்னுக்கு கடலை மாவு ஸ்கரப் போட்ட போதும்

முகப்பரு சிகிச்சைக்கு கிராம்பு

clove face pack

கிராம்பு ஆண்டிசெப்டிக் பண்புகள் நிறைந்துள்ளதால் முகத்தில் உள்ள பருக்களை குறைக்க உதவுகிறது மற்றும் துளைகளை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது.

ஃபேஸ் மாஸ்க் செய்முறையை

  • இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு தூள் கிராம்பு, கிராம்பு எண்ணெய், ஆப்பிள் மற்றும் கிரீன் டீ தேவைப்படும்.
  • ஆப்பிள்களை மெல்லிய பேஸ்டாக அரைத்து அதில் கிரீன் டீயுடன் சிறிது தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொத்து இரக்கிய பின் ஆப்பிள் பேஸ்ட் மற்றும் கிரீன் டீயை ஒன்றாக கலந்து, 1 தேக்கரண்டி கிராம்பு தூள் மற்றும் 1 துளி கிராம்பு எண்ணெய் சேர்க்கவும்.
  • இந்த கலவையை முகம் முழுவதும் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 
  • இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். 

இளமை தோற்றத்திற்கு கிராம்பு பேஸ்ட்

  • கிராம்புகளின் மேற்பூச்சு பயன்பாடு மற்றும் நுகர்வு இரண்டும் சருமத்தை ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது.
  • கிராம்பு சாப்பிடுவதால் வயதை குறைத்து இளமையாக தொற்றமளிக்க செயல்படுகிறது. முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • வயதான எதிர்ப்பு பேஸ் பேக்கை உருவாக்க கிராம்பு எண்ணெய் மற்றும் காட்டன் பேட் தேவைப்படும்.
  • முகத்தை நன்கு கழுவி சருமத்தை உலர வைக்கவும்.
  • பின்னர் ஒரு காட்டன் பேடில் அல்லது கையில் சிறிது கிராம்பு எண்ணெயை எடுத்து மசாஜ் செய்யவும்.
  • இந்த எண்ணெயை இரவு பயன்படுத்தப்படும் சீரத்தில் கலந்து தினமும் தடவினால் விரைவான பலன் கிடைக்கும்.

தழும்புகள் மற்றும் முகப்பரு நீக்கும் கிராம்பு

clove face pack pimple

  • கிராம்பை வழக்கமாகப் பயன்படுத்துவதால் சீரான சரும தொனியை வழங்குவதன் மூலம் தெளிவான சருமத்தை பெறலாம்.
  • பருவை குறைக்க கிராம்பு பேஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் :1/2 தேக்கரண்டி தூள் கிராம்பு, 1/2 தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 எலுமிச்சை சாறு தேவைப்படும்.
  • ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
  • பின்னர் விரல்களால் முகத்தில் தடவவும்.
  • முகத்தில் சுமார் 25 நிமிடங்கள் வைத்திருக்கவும். 
  • உலர்ந்த பின் முகத்தை தண்ணீரில் கழுவவும்.
  • இந்த கிராம்பு பேஸ்டை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துங்கள்.

இந்த பதிவும் உதவலாம்:  11 நாட்களில் முகம் வெண்மையாக்கும் புரோட்டீன் ஃபேஸ் பேக்

எனவே, இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி சருமத்தௌ பிரகாசிக்க செய்யவும்! இந்தக் கட்டுரையைப் படித்து உங்களுக்குப் பிடித்திருந்தால், இது போன்ற பல கட்டுரைகளுக்கு HerZindagi உடன் இணைந்திருங்கள்.

 

 

Image Credit: Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com