
கோடையில் சூரிய ஒளியால் நமது சருமம் மிகவும் பாதிப்படைகிறது பின்னர் பருவமழை வருகிறது அதன் காரணமாக சருமம் அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதனால் சில நேரங்களில் முகத்தில் புள்ளிகளை ஏற்படுத்தும். இது அனைத்தையும் தவிர்க்க புரோட்டீன் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தவும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எப்படி புரதம் தேவையோ அதே போல சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க புரதம் தேவைப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இளமை மாறாமல் முகம் அப்படியே இருக்க வீட்டில் இதை செய்து பாருங்கள்
டெல்லியின் ஆர்டி சலோனின் அழகுக்கலை நிபுணரான ரிது தாரிவால் கூறுகையில் “முகத்தை மேம்படுத்த சருமத்திற்கும் புரதம் தேவை”. புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் ஏராளமாக உள்ளதால் இந்த புரோட்டீன் ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம். புரோட்டீன் ஃபேஸ் பேக்குகள் சருமத்தை அழகாகவும், குறைபாடற்றதாகவும் மாற்ற பயன்படுகிறது.எந்தெந்த புரோட்டீன் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

சருமத்தின் அழகை அதிகரிக்கவும், பருவமழையின் வறட்சியை போக்கவும் முட்டையின் வெள்ளைக்கரு ஃபேஸ் பேக் சிறந்த வழியாகும். இது ஒரு புரோட்டீன் ஃபேஸ் பேக் ஆகும், இது முகத்திற்கு உடனடி பளபளப்பைக் கொண்டுவருகிறது. முகத்தில் உள்ள அனைத்து வறண்ட சருமத்தையும் சுத்தம் செய்கிறது. முகத்தில் பொலிவைக் கொண்டுவர ஒரு பயனுள்ள ஃபேஸ் பேக்.

முகத்தில் இயற்கையான சிவப்பைக் கொண்டு வர விரும்பினால் பீட்ரூட்- தயிர் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தவும். இதனால் முகத்தில் உடனடி பளபளப்பு வந்து முகம் சிவப்பாக இருக்கும். பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் முகத்தில் உள்ள சுருக்கங்களையும் கண்களுக்குக் கீழே உள்ள கருமையையும் நீக்குகிறது. மழைக்காலம் மற்றும் கோடை காலங்களில் ஏற்படும் அரிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இதனுடன் சருமத்தை களங்கமற்றதாக மாற்றுகிறது.

சந்தையில் பீட்ரூட்டைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நீங்கள் முட்டையைப் பயன்படுத்தவில்லை என்றால், ரோஸ் வாட்டர்-பால் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள். பாலில் போதுமான அளவு புரதம் உள்ளதால் சருமத்தில் உள்ள அனைத்து புள்ளிகளையும் குணப்படுத்துகிறது மற்றும் அதை களங்கமற்றதாக மாற்றுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: முகம் கண்ணாடி போல் ஜொலிக்க 7 வீட்டு வைத்தியம்
இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால் முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.
முக சருமத்தை வெண்மையாக வைத்திருக்க குறிப்பிட்டுள்ள இயற்கையான விஷயங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த கட்டுரையைப் பகிர மறக்காதீர்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்து பெட்டியில் உங்கள் கருத்தை எங்களிடம் கூறுங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com