
கோடை காலம் துவங்கிய நிலையில் உங்கள் தலைமுடிக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. ஏன் என்றால் பெணகள் பலருக்கும் இந்த கோடை காலத்தில் உலர் முடி, தலைமுடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க, உங்களுக்கு சரியான தலை முடி பராமரிப்பு நடைமுறை தேவை. அதே போல வலுவான தலை முடிக்கு ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். நம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாத நிலையில், உங்கள் தலை முடியின் ஆரோக்கியம் மோசமடையத் தொடங்கும். மேலும் உங்கள் தலைமுடி மெல்லியதாகவும் வறட்சியாகவும் தோன்ற ஆரம்பிக்கலாம். வீட்டில் இருந்தபடி தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க கேரட் பயன்படுத்துவது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது, இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது உங்கள் தலை முடி வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியை தூண்டவும் கேரட் உதவும். ஒரு வேலை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, இந்த கேரட்டை மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம்.
இதற்கு முதலில் கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும். இப்போது, ஒரு வாழைப்பழத்தை உரித்து, அதே மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதன் பிறகு இந்த கலவையில் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இப்போது இந்த கேரட் மாஸ்க் கலவையை உங்கள் தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு உங்கள் தலைமுடியை ஷாம்பூ அல்லது ஷிகற்காய் பயன்படுத்தி நன்றாக கழுவவும். வாரம் ஒருமுறை இந்த கேரட் மாஸ்க் பயன்படுத்தி வந்தால் உங்கள் தலைமுடி பளபளப்பாகவும் வலுவாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
