குளிர்காலத்தில் தலைமுடி கரடுமுரடாக உள்ளதா? பார்லர் வேண்டாம்; சரி செய்ய இரண்டு பொருட்கள் போதும்.

குளிர்காலத்தில் தலைமுடி அதிகமாக கொட்டும் போது தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி சரி செய்ய முயற்சி செய்யலாம்.  
image
image

கோடைக்காலத்தை விட குளிர்காலத்தில் பெண்கள் அதிக தலைமுடி பிரச்சனைக்கு ஆளாவார்கள். குறிப்பாக முடி வறண்டு போவது முதல் முடி உதிர்வு என சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இந்த பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே தீர்க்க முடியவில்லை என்றால் எதிர்காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனை என்பது தொடர்கதையாக இருக்கும். இதற்காக நீங்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி தலைமுடி பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் எளிதில் கிடைக்கும் இரண்டு பொருட்களைக் கொண்டு சரி செய்ய முடியும். இவை முடியை மென்மையாக்குவது முதல் முடி கொட்டும் பிரச்சனையைத் தீர்க்க உதவும். இதோ அவை என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் ஹேர் மாஸ்க்:

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய தலைமுடி பிரச்சனையைச் சரி செய்வதற்கு வீட்டில் எளிதில் கிடைக்கும் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கினால் போதும் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க் ரெடி. இந்த கலவையை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனிவரை நன்கு தடவிக் கொள்ளவும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக சீயக்காய் அல்லது குறைந்த அளவு கெமிக்கல் கொண்ட ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசினால் போதும். தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் கரடுமுரடான தன்மையை நீங்கி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும். மேலும் முடி உதிர்வு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதோடு எப்போதும் தலைமுடி மென்மையாகவும், ஆரோக்கியமாக வும் இருக்கும்.

curd and coconut oil

இதோடு மட்டுமின்றி தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஹேர் பேக்கை தலைமுடிக்கு வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் போது பொடுகு பிரச்சனையைப் போக்க உதவியாக இருக்கும். மேலும் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய முடி உதிர்தல் பாதிப்பையும் சரி செய்யும்.

மேலும் படிக்க:எண்ணெய் தடவாமல் கூந்தலை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள்

முட்டை ஹேர் மாஸ்க்:

தலைமுடியை எப்போதும் பராமரிக்க முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த தேர்வாக அமையும். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இதை உச்சந்தலையிலிருந்து நுனி வரை நன்கு அப்ளை செய்து காய விடவும். பின்னர் சீயக்காய் கொண்டு அலசினால் போதும். கரடு முரடாக உள்ள தலைமுடி பஞ்சு போன்று மாறிவிடும். முட்டை மட்டுமின்றி கற்றாழை, வெந்தயம் போன்ற வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP