herzindagi
scar

Face Scars: படிகாரம் வைத்து முகத்தில் இருக்கும் பள்ளங்களை சரி செய்யலாம்!!

முகத்தில் உள்ள புள்ளிகளை மறைய செய்ய, வீட்டிலேயே நிபுணர் கூறும் இந்த எளிய செய்முறையை நீங்கள் முயற்சி செய்யலாம்.
Updated:- 2023-07-11, 23:08 IST

ஒருவருடைய முகன்தான் அவர்களின் முதல் அடையாளம். ஒவ்வொருவரும் தங்கள் முகத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். இருப்பினும் மாசுபாடு மற்றும் தவறான உணவுகளால், சருமம் மிகவும் பாதிக்கப்படுகிறது மற்றும் பல்வேறு காரணங்களால் முகத்தில் பருக்கள், புள்ளிகள் மற்றும் பள்ளங்கள் தோன்றி அழகைக் குறைக்கிறது.

பெண்கள் முகத்தில் உள்ள பள்ளங்களை பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். சந்தையில் பல பொருட்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த தீர்வை அழகு நிபுணர் பூனம் சுக் எங்களிடம் கூறியுள்ளார். படிகாரம் மற்றும் ரோஸ் வாட்டர் மூலம் வீட்டிலேயே ஃபேஸ் டோனரை உருவாக்கலாம் என்கிறார் பூனம் ஜி. இந்த டோனரைப் பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள புள்ளிகள் இலகுவாகத் தொடங்கும்.

 

இந்த பதிவும் உதவலாம்: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை ஒரே இரவில் நீக்கலாம்! எப்படி தெரியுமா?

வீட்டிலேயே ஃபேஷியல் டோனரை எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.

Alum

தேவையான பொருள்கள்

  • 1 கப் படிகாரம் தண்ணீர்
  • 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
  • 1 வைட்டமின்-ஈ காப்ஸ்யூல்
  • 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை

  • பெரிய கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி 1 டேபிள் ஸ்பூன் படிகாரத் தூள் சேர்க்கவும்.
  • படிகாரத்தை தண்ணீரில் கரைக்க 1 மணி நேரம் விடவும்.
  • நீரை வடிகட்டி அதில் இருக்கும் மற்ற படிகார கற்கலை எடுக்கவும்.
  • இந்த கலவையில் ரோஸ் வாட்டர், வைட்டமின்-இ கேப்ஸ்யூல், கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்கவும்.
  • கலவையை நன்றாகக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும்.
  • முக டோனர் தயார். 

முக டோனரை பயன்படுத்தும் முறை 

toner

காலையில் எழுந்ததும் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். 

  • பின் முகத்தைத் துடைத்துவிட்டு ஃபேஷியல் டோனரைப் பயன்படுத்த வேண்டும்.
  • முகத்தில் ஸ்ப்ரே செய்த பிறகு விரல்களின் உதவியுடன் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
  • பின் 10 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.
  • தினமும் 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • இரவு தூங்குவதற்கு முன்பும் இந்த செயல்முறையை பின்பற்றலாம்.

தற்காப்பு நடவடிக்கை

  • வறண்ட சருமத்தில் ஃபேஷியல் டோனரை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் படிகாரம் சருமத்தை உலர வைக்கும்.
  • சருமத்தில் தீக்காயம் அல்லது வெட்டுக் குறி இருந்தால் டோனரைப் பயன்படுத்த வேண்டும்.
  • சருமத்தில் தொற்று இருந்தால் ஃபேஷியல் டோனரை பயன்படுத்தக் கூடாது.
  • ஃபேஷியல் டோனரை சருமத்தில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

நன்மைகள்

scar face clear

  • சுருக்கமான சருமம் இருந்தால் ஃபேஷியல் டோனர் சருமத்தை சிறிது இறுக்கமாக்கும்
  • ஃபேஷியல் டோனர் சருமத்திற்கும் பொலிவைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: முகம் முழுவதும் இதுப்போல கருத்திட்டு உள்ளதா? வீட்டிலேயே சரிசெய்யும் முறை இதோ

குறிப்பு:  இந்த ஃபேஷியல் டோனரைப் பயன்படுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஸ்கின் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த கட்டுரையைப் பகிருங்கள். மேலும் இது போன்ற கட்டுரைகளைப் படிக்க, Harzindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com