herzindagi
face pigmentation tips

Home Remedies for Pigmentation : முகம் முழுவதும் இதுப்போல கருத்திட்டு உள்ளதா? வீட்டிலேயே சரிசெய்யும் முறை இதோ

முகத்தில் ஏற்படும் கருத்திட்டை சரிசெய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கருத்திட்டு பிரச்சனையை சரிசெய்யும் வீட்டு வைத்திய இதோ
Editorial
Updated:- 2023-07-05, 10:44 IST

முகத்தில் கருத்திட்டு பல காரணங்கள் ஏற்படுகிறது. சருமத்தில் மெலனின் அதிகமாக உருவாகத் தொடங்குவதுதான் இதற்குப் பெரிய காரணம். சூரியனின் புற ஊதாக் கதிர்களால் சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரித்தல் தொடங்கி  இதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.  உதாரணமாக, வயது அதிகரிப்பு,  பலவீனம், ஏதேனும் தீவிர நோய் காரணமாக, மெலனின் உருவாகத் தொடங்குகிறது.

 நிறமிக்கு வயது அதிகரிப்பு அல்லது சூரியனின் புற ஊதா கதிர்கள் காரணமாக இருந்தால், சில ஆயுர்வேத வைத்தியங்களை எடுத்துக் கொண்டால், இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறலாம். இது குறித்து ஜூவேனா ஹெர்பல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர், ஆயுர்வேத நிபுணரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மேதா சிங்கிடம் பேசினோம். அவர் கூறுகையில், 'எப்போது சருமத்தை பராமரிக்கவில்லையோ, அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தோன்றும். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், சருமப் பராமரிப்பிலும் முழு கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, 30 வயதிற்குப் பிறகு கருத்திட்டு பிரச்சனை ஏற்பர்டும், , ஆனால் இன்றைய தவறான வாழ்க்கை முறையால், 25 வயதுடைய பெண்களிடமும் இந்த பிரச்சனையை நீங்கள் காணலாம்.

 

சரிசெய்யும் வீட்டு வைத்தியம் 

 மஞ்சள் 

  • 1 டீஸ்பூன்  மாவு
  • 1 டீஸ்பூன் பால்
  • 1 டீஸ்பூன் மஞ்சள்

 turmeric

 

 

பயன்படுத்தும் முறை

  • மூன்று பொருட்களையும் கலந்து பேஸ்ட்  போல் முகத்தில் அப்ளை செய்யவும். இதை தினமும்  தவறாமல் செய்து வந்தால், நல்ல பலன்களை காணலாம்.
  •  மஞ்சள் கருத்திட்டை தடுக்கிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது.

 

சந்தனம்

  •  1 டீஸ்பூன் சந்தன தூள்
  • 1 டீஸ்பூன் ஆரஞ்சு சாறு

 

பயன்படுத்தும் முறை

 

  • ஆரஞ்சு சாற்றில் சந்தனப் பொடியை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். இதற்குப் பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 
  • கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை தடுக்க மிகவும் நல்லது. 

 

குங்குமப்பூ 

  • 1 டீஸ்பூன் பால்
  • 2 முதல் 3  குங்குமப்பூ

 

பயன்படுத்தும் முறை 

  •  குங்குமப்பூவை பாலில் 15 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பிறகு, இந்த கலவையை முகத்தில் தடவவும். இதை தினமும் செய்து வந்தால், கருத்திட்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  •  குங்குமப்பூ மற்றும் பால் இரண்டும் ப்ளீச்சிங் தன்மை கொண்டவை மற்றும் சருமத்தை பளபளப்பாக்குகின்றன.

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

 

 

 Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com